Tamilnadu
காணாமல் போன குழந்தையை தேடி பரிதவித்த தாய்.. கழிவறை கதவை திறந்து பார்த்தபோது காத்திருந்த அதிர்ச்சி!
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளத்தை அடுத்த வாதலக்கரை பகுதியைச் சேர்ந்தவர் மாரிப்பாண்டியன். இவரது மனைவி மாரித்தாய். இந்த தம்பதிக்கு ஒரு வயதில் பெண் குழந்தை ஒன்று இருந்தது.
இந்நிலையில் நேற்று வீட்டில் மாரித்தாய் வேலைப்பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது விளையாடிக் கொண்டிருந்த குழந்தை திடீரென காணாமால் போனது. இதனால் அதிர்ச்சியடைந்த தாய் குழந்தையை பல இடங்களில் தேடி பார்த்துள்ளார்.
ஆனால் குழந்தை கிடைக்கவில்லை. மேலும் குழந்தையை யாரும் தூக்கிச் செல்லவில்லை என பக்கத்து வீட்டில் இருப்பவர்கள் கூறியுள்ளனர். இதனால் வீட்டிலேயே மாரித்தாய் மீண்டும் தேடிப் பார்த்துள்ளார்.
அப்போது, வீட்டின் குளியல் அறையிலிருந்த வாளியில் குழந்தை தலைக்குப்புற கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். அவரின் சத்தம் கேட்டு வந்துபார்த்த அருகே இருந்தவர்கள் உடனே குழந்தையை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர்.
அங்கு, குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குளியல் அறை வாளியில் தவறி விழுந்து ஒரு வயதுக் குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“இரு மாநிலங்களும் ஒன்றிணைந்து செயல்படவுள்ளோம்!” : ஜெர்மனியின் NRW முதல்வரை சந்தித்த முதலமைச்சர் !
-
தேசிய அளவில் 8 விளையாட்டு வீராங்கனைகளுக்கு பணி நியமனம்! : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
-
“தொழிலாளர்களுக்கு வாழ்வளிக்கும் Dollar City திருப்பூர் தவிக்கிறது!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
இதுதான் திமுக - சொன்னதையும் செய்திருக்கிறோம் சொல்லாததையும் செய்திருக்கிறோம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
505 தேர்தல் வாக்குறுதிகளில் 404 திட்டங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்!