Tamilnadu
ஹெட்செட் அணிந்து செல்போனில் பாட்டு கேட்ட இளைஞர்.. ரயில் தண்டவாளத்தை கடந்தபோது நடந்த விபரீதம்!
திருவாரூர் மாவட்டம், முடிகொண்டான் பகுதியைச் சேர்ந்தவர் வீரபத்திரன். இவரது மகன் வெங்கடேஷ். இவர் நேற்று இரவு தங்களது வயலுக்குத் தண்ணீர் பாய்ச்சுவதற்காகச் சென்றுள்ளார்.
இவர்களது வயல் அப்பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தை கடந்து செல்வதுபோல் இருக்கும். இதனால் வெங்கடேஷ் தனது செல்போனில் ஹெட்செட் மாட்டிக் கொண்டு பாடல்கள் கேட்ட படியே ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்று கடக்க முயன்றுள்ளார்.
அப்போது, சென்னை நோக்கிச் சென்ற மன்னை எக்ஸ்பிரஸ் ரயில் அவர் மீது மோதியுள்ளது. இதில் உடல் சிதறி வெங்கடேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இது பற்றி தகவல் அறிந்து அங்கு வந்த ரயில்வே போலிஸார் வெங்கடேஷ் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வயலுக்குத் தண்ணீர் பாய்ச்ச சென்றபோது ரயில் மோதி இளைஞர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“மக்களின் மனசாட்சியாய் தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர்கள் செயல்படுவார்கள்!” : மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!
-
‘புது வடிவம் பெறும் உலகக்கோப்பை கிரிக்கெட்.. ஐபிஎல் போல் எலிமினேட்டர் சுற்றுகள்.. சுவாரசியமான விதிகள்!’
-
பழனி கோயில் ரூ.100 கோடி நில மோசடி : விமர்சனம் செய்தவரை இரவோடு இரவாக கைது செய்த தவெக போலீஸ்!
-
ரூ. 1.30 லட்சம் லஞ்சம்.. வைரலான வீடியோ.. திசை திருப்பிய தவெக.. பின்னர் கைது நடவடிக்கை! - என்ன நடந்தது?
-
2 பவுன் சங்கிலி பறிப்பு.. காவல் நிலையம் முன்பே நடந்த சம்பவம்.. தவெக நிர்வாகி செயலை கண்டுகொள்ளாத போலீஸ்!