Tamilnadu
100க்கும் அதிகமான இளம்பெண்களின் ஆபாச படங்கள்: மகனுக்கு துணை போன நாகர்கோவில் காசி தந்தைக்கு ஜாமீன் மறுப்பு
சமூக வலைத்தளங்கள் மூலமாக ஆசை வார்த்தைகளை கூறி தமிழகம் மற்றும் பிற மாநிலங்களை சேர்ந்த 120க்கும மேற்பட்ட மாணவிகள் மற்றும் இளம் பெண்களை காதலிப்பதாக ஏமாற்றி பணமோசடி மற்றும் ஆபாச புகைப்படங்களை வெளியிட்டுவதாக மிரட்டிய வழக்கில் நாகர்கோவில் சேர்ந்த சுஜி என்ற காசி எனபவன் கடந்த 2020 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டான்.
இந்த வழக்கில் மாணவிகள் உட்பட ஏராளமான இளம் பெண்களை காதலிப்பதாக கூறி ஏமாற்றி பாலியல் வன்புணர்ச்சி செய்துள்ளான் காசி. இவர் மீது போக்சோ வழக்கு, பாலியல் பலாத்கார வழக்கு, ஒரு கந்துவட்டி வழக்கு என பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகள் சி.பிசி.ஐ.டி போலிஸ் வசம் ஒப்படைக்கப்பட்டன.
இந்நிலையில் அவரது செல்போன் மற்றும் லேப்டாப் ஆகியவற்றில் இருந்த ஆபாச படங்கள் அழிக்கப்பட்டுள்ளதால் அதிர்ச்சி அடைந்த சி.பி.சி.ஐ.டி போலிஸார் லேப்டாப்பை யார் அழித்திருக்கக்கூடும் என்ற அடிப்படையில் விசாரணை மேற்கொண்டதில், காசியின் தந்தையான தங்கபாண்டியன் இந்த செயலை செய்திருப்பதாக அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்த வழக்கில் காசியின் அப்பா தங்க பாண்டியன் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். இவர் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தால். இந்த மனு நீதிபதி புகழேந்தி முன்பாக விசாரணை செய்யப்பட்டு இன்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
வழக்கு விசாரணையின் போது இந்த வழக்கை விசாரணை செய்யும் சிபிசிஐடி போலிஸார் காசியின் அப்பா தங்கபாண்டிக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என அறிக்கை தாக்கல் செய்தனர் . அந்த அறிக்கையில் அதிர்ச்சியான சம்பவங்கள் நீதிபதி தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
வழக்கு விசாரணையின் போது சி.பி.சி.ஐ.டி போலிஸார் காசியின் வீட்டில் இருந்து ஆப்பிள் மொபைல் போனும் அவர் பயன்படுத்திய லேப்டாப்பும் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட லேப்டாப் தடையவியல் நிபுணர்கள் சோதனை செய்தபோது முதல் குற்றவாளியான காசி 100 மேற்பட்ட மாணவிகளை ஆசை வார்த்தை கூறியும் மிரட்டியும் பாலியல் தொந்தரவு செய்யப்பட்டுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும் முழு மற்றும் அரை நிர்வாண படங்கள் வீடியோ இருந்ததாக சி.பி.சி.ஐ.டி போலிஸார் அறிக்கை தாக்கல் செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். எனவே வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளதால் இந்த வழக்கின் இரண்டாவது குற்றவாளியான காசியின் தந்தை தங்க பாண்டிக்கு ஜாமீன் வழங்க முடியாது என கூறி அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தார்.
Also Read
-
முடிவடையும் இஸ்ரேல் - காசா போர் : அமைதி ஒப்பந்தத்துக்கு ஹமாஸ் ஒப்புதல் அளித்ததாக டிரம்ப் அறிவிப்பு !
-
இலங்கை கடற்படையால் 30 மீனவர்கள் கைது : நடவடிக்கை கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம் !
-
ரூ.49.59 கோடி - 23 புதிய திட்டப்பணிகள் : 5478 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர்!
-
சுற்றுலா தொகுப்புகள் மூலமாக தமிழ்நாடு அரசுக்கு 2.37 கோடி வருவாய் : அமைச்சர் இரா.இராஜேந்திரன் தகவல்!
-
கோவையில் 5 தளங்களுடன் கூடிய பிரம்மாண்ட ‘தங்கநகை பூங்கா’! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்!