தமிழ்நாடு

“சுஜிக்கு வலதுகையாக செயல்பட்ட டேசன் ஜினோ” - பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டிய சுஜியின் நண்பன் கைது!

சுஜிக்கு உதவியாக இருந்த இரண்டு பேரில் முக்கிய குற்றவாளியான நாகர்கோவிலைச் சேர்ந்த டேசன் ஜினோ என்பவனை போலிஸார் தற்போது கைது செய்துள்ளனர்.

“சுஜிக்கு வலதுகையாக செயல்பட்ட டேசன் ஜினோ” - பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டிய சுஜியின் நண்பன் கைது!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கணேசபுரம் பகுதியைச் சேர்ந்த பிரபல கோழி வியாபாரி தங்கபாண்டியன் என்பவரது மகன் காசி என்ற சுஜி. இவர் சென்னையைச் சேர்ந்த இளம் மருத்துவர் ஒருவரை காதலிப்பதாக ஏமாற்றி பணம் பறித்ததுடன் அவரது புகைப்படத்தையும் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.

அதேபோல் காதலிப்பதாக கூறி அவர்களை நம்பவைத்து, பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று பாலியல் தொடர்பு வைத்துள்ளார். அதோடு பெண்களுக்குத் தெரியாமலேயே வீடியோ எடுத்து அதை வைத்து மிரட்டி பணம் பறித்து வந்துள்ளார். அப்படி மருத்துவரை மிரட்டி பணம் பறித்த வழக்கில் கடந்தவாரம் சுஜி குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

அதைத் தொடர்ந்து அவரால் பாதிக்கப்பட்ட பல பெண்கள் தொடர்சியாக அவன் மீது புகார் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் சுஜியை தொடர்ந்து விசாரித்து வரும் போலிஸாருக்கு அவனுடன் தொடர்பில் உதவியாக இருந்த சிலரையும் அடையாளம் கண்டு அவர்களையும் செய்து செய்துவருகின்றனர்.

“சுஜிக்கு வலதுகையாக செயல்பட்ட டேசன் ஜினோ” - பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டிய சுஜியின் நண்பன் கைது!

அந்தவகையில், சுஜிக்கு உதவியாக இருந்த இரண்டு பேரில் முக்கிய குற்றவாளியான நாகர்கோவிலைச் சேர்ந்த டேசன் ஜினோ என்பவரை போலிஸார் தற்போது கைது செய்துள்ளனர்.

இதுதொடர்பாக போலிஸ் தரப்பில் ஒருவர் கூறுகையில், “சென்னை மருத்துவரின் புகைப்படத்தை வெளியிட்ட டேசன் ஜினோவைத் தற்போது கைது செய்துள்ளோம், அவன்தான் சுஜி அனுப்பும் பெண்களின் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளான்.

வழக்கமாக சுஜி தொடர்பில் இருக்கும் பெண்ணுக்கு அவனைப்பற்றி தெரியவந்தால், அந்தப் பெண்கள் அவனது நட்பு வட்டத்தில் இருந்து விலகுவார்கள். அப்படி விலகும் பெண்களை மிரட்டுவதற்காக, சுஜி அந்தப் பெண்ணுடன் நெருக்கமாக இருந்த புகைப்படத்தை டேசன் ஜினோவிற்கு அனுப்புவான்.

டேசன் ஜினோ
டேசன் ஜினோ

டேசன் ஜினோ அந்த புகைப்படத்தை சம்பந்தபட்ட பெண்ணுக்கு அனுப்புவான். இப்படி நமது புகைப்படம் வெளியாட்களுக்கு எப்படி வந்தது என்று தெரியாமல் பதறியடித்து அந்தப் புகைப்படம் குறித்து டேசனைத் தொடர்புக் கொண்டு சம்பந்தப்பட்ட பெண்கள் கேட்டுள்ளனர்.

அப்போது சுஜி பற்றிய விஷயங்களை கூறிவிட்டு அவன் சொல்வதைச் செய்யாவிட்டால் புகைப்படத்தை ‘பப்ளிக்காக பரப்பி விடுவேன்’என மிரட்டியுள்ளான் டேசன் ஜினோ. இப்படி இவர்கள் பல பெண்களின் வாழ்க்கையை சீரழித்துள்ளார்கள். இவர்களை போல இன்னும் சிலரும் விரைவில் சிக்குவார்கள்.” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories