Tamilnadu
முதலிரவில் விசித்திர முறையில் மகளுக்கு பாலியல் கொடுமை.. : மருமகன் மீது மாமியார் கொடுத்த அதிர்ச்சி புகார்!
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லுாரைச் சேர்ந்தவர் நளினி (26). இவருக்கும் நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை அருகே வசித்து வரும் ராஜ்குமார் (37) என்பவருக்கும் சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நிச்சயக்கப்பட்டது. இரு வீட்டார் சம்மதத்துடன் திருவாரூர் மாவட்டம், ஆலத்தம்பாடியில் உள்ள திருமண மண்டபத்தில் கடந்த 27-ம் தேதி திருமணம் நடைப்பெற்றது.
பின்னர் பெற்றோர்கள் புதுமண தம்பதிகளுக்கு வழக்கம்போல் முதலிரவு ஏற்பாடு செய்திருந்தனர். தொடர்ந்து, அன்றிரவு இருவரும் தனிமையில் இருந்தபோது மணமகன் ராஜ்குமார், தனது மனைவி நளினியுடன் பாலியல் உறவில் ஈடுபட்டுள்ளார். அப்போது ராஜ்குமார் நளினியோடு இயற்கைக்கு மாறான உறவு வைத்து கொடுமைப்படுத்தியுள்ளார். இதனை தாங்க முடியாத அந்த பெண், அலறி கூச்சலிட்டுள்ளார்.
நளினியின் அலறல் சத்தத்தை கேட்டு பதற்றமடைந்த நளினியின் தாய், பரமேஸ்வரி கதவை தட்டி உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது நளினி உடல் முழுதும் காயங்களுடன் மயங்கி கிடந்துள்ளார். பின்னர் அவரை மீட்ட உறவினர்கள் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதனிடையே நளினியை இந்த கதிக்கு உள்ளாக்கிய ராஜ்குமார் தப்பி சென்றுள்ளார்.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தாய் பரமேஸ்வரி, காவல்துறையில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், "திருமணத்திற்கு வரதட்சணையாக 12 சவரன் நகை, பைக் மற்றும் மூன்று லட்சம் ரூபாய்க்கு சீர் வரிசை பொருட்கள் வழங்கினோம். தொடர்ந்து அவர்கள் இருவருக்கும் திருமண ஏற்பாடுகள் செய்து திருமணமும் நடந்து முடிந்தது. ஆனால் முதலிரவின்போது மாப்பிள்ளை, என் மகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார்.
இதனால் பாதிக்கப்பட்ட எனது மகள் தற்போது மருத்துவமனையில் உயிருக்குள் போராடி தீவிர சிகிச்சையில் உள்ளார். ஆனால் மாப்பிள்ளையோ பயந்துபோய் எங்கேயோ தப்பி ஓடி, தலைமறைவாகியுள்ளார். எனவே மனநலம் பாதித்தவரை போல நடந்துக் கொண்ட ராஜ்குமாரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தது.
பின்னர் வழக்குப்பதிவு செய்த மகளிர் காவல்துறையினர், தலைமறைவாகியுள்ள ராஜ்குமாரை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!