Tamilnadu
லாரி மோதியதில் தூக்கி வீசப்பட்ட பெண் பலி.. கணவரை அழைத்து வரச் சென்றபோது பரிதாபம்!
காஞ்சிபுரம் மாவட்டத்தை சேந்த ஆறுமுகம் என்பவர் உறவினரின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு வீட்டுக்கு திரும்பியுள்ளார். அவரை அழைத்துச் செல்ல அவரது மனைவி பரமேஸ்வரி இருசக்கர வாகனத்தில் காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளார்.
அப்போது மாநகராட்சி அலுவலகம் அருகே சாலையில் இருந்த புதைவடிகால் இணைப்பு பள்ளத்தை தவிர்ப்பதற்காக வலது பக்கமாக தனது இரு சக்கர வாகனத்தை திருப்பியுள்ளார்.
அப்போது அந்த பகுதியில் அதிவேகமாக வந்த லாரி எதிர்பாராதவிதமாக இரு சக்கர வாகனத்தின் மேல் மோதியுள்ளது. இந்த விபத்தில் படுகாயமடைந்த பரமேஸ்வரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். .
இது குறித்த தகவல் அறிந்து சிவகாஞ்சி போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
"குற்ற உணர்ச்சியே இல்லாமல் பொறுப்பற்று பேசுகிறார் விஜய்" - மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விமர்சனம் !
-
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி காவாய் அனுபவிக்கும் கொடுமைகள் - பாஜக அரசின் அவலத்தை அம்பலப்படுத்திய முரசொலி !
-
”தமிழ்நாட்டை உலகின் விளையாட்டு மையமாக மாற்றி வருகிறோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
”தமிழ்நாட்டில் தயாரிக்கப்படும் பொருட்கள் ஜப்பான் தரத்துக்கு இணையானது” : டி.ஆர்.பி ராஜா பெருமிதம்!
-
தமிழ்நாட்டு வீரர் அ.மஹாராஜனுக்கு ரூ.25 லட்சம் ஊக்கத்தொகை! : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!