விளையாட்டு

கேப்டன் பொறுப்பிலிருந்து ரோஹித் சர்மா விலக வேண்டும்.. போர்க்கொடி உயர்த்திய ஷேவாக்.! பின்னணி என்ன?

இந்திய கிரிக்கெட் அணியின் 20 ஓவர் கேப்டன் பொறுப்பிலிருந்து ரோஹித் சர்மா விலக வேண்டும் என வீரேந்தர ஷேவாக் கூறியுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேப்டன் பொறுப்பிலிருந்து ரோஹித் சர்மா விலக வேண்டும்.. போர்க்கொடி உயர்த்திய  ஷேவாக்.! பின்னணி என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விராட் கோலி விலகிய நிலையில் 3 வகை போட்டிகளுக்கும் கேப்டனாக ரோஹித் சர்மா செயல்பட்டு வருகிறார்.இந்த நிலையில் கடந்த ஐபிஎல் தொடரில் ரோஹித் சர்மா சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தாதது கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து ரன் குவிக்க தடுமாறியதால்தான் விராட் கோலியிடமிருந்து கேப்டன் பதவி பறிக்கப்பட்டது. இதனை காரணமாக வைத்தே விராட் கோலி தனது கேப்டன் பதவியை உதறினார். ஆனால் அவருக்கு பதிலாக வந்த ரோஹித் சர்மாவும் ரன் குவிக்க தடுமாறி வருகிறார். இதனால் அவர் கேப்டன் பொறுப்பில் தொடர்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

கேப்டன் பொறுப்பிலிருந்து ரோஹித் சர்மா விலக வேண்டும்.. போர்க்கொடி உயர்த்திய  ஷேவாக்.! பின்னணி என்ன?

இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர ஷேவாக், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு ஒரு கோரிக்கையை முன் வைத்துள்ளார்.

அதில் வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், ரோஹித் சர்மாவுக்கு பதில் இன்னொருவர் அணியை தலைமை ஏற்று நடத்த வேண்டும் என கூறியுள்ளார்.

மேலும், ரோஹித் சர்மாவால் தனது திறனை சரியான இடத்தில் வெளிப்படுத்த முடியவில்லை என்றும், மற்றொரு நபருக்கு தலைமைப் பொறுப்பை ஒப்படைத்தால் அது அணிக்கு வெற்றி தேடி தரும் என்றும் கூறியுள்ளார்.

கேப்டன் பொறுப்பிலிருந்து ரோஹித் சர்மா விலக வேண்டும்.. போர்க்கொடி உயர்த்திய  ஷேவாக்.! பின்னணி என்ன?

சேவாக்கின் கருத்து கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. 20 ஓவர் உலகக்கோப்பை தொடங்க சில மாதங்களே இருக்கும் நிலையில் கேப்டன் மாற்றப்பட்டால் அது அணிக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தும் எனவும் சிலர் கூறி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories