Tamilnadu
வாளியில் உள்ள நீரில் மூழ்கி 11 மாத குழந்தை பலி.. தாயிடம் போலிஸ் விசாரணை - பகீர் பின்னணி?
திருப்பூர் அடுத்த அனுப்பர்பாளையம் அருகே உள்ள அவிநாசி நகர் பகுதியில், பீகாரை சேர்ந்த புதன்மார்கோ (29). இவரது மனைவி சன்விகா தேவி (27). இவர்கள் குடும்பத்துடன் தங்கி பனியன் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வருகின்றனர். இந்த தம்பதியின் 11 மாத குழந்தை தஞ்சன்.
இந்நிலையில், நேற்று புதன்மார்கோ வேலைக்கு சென்றுவிட்டார். வீட்டில் சண்டிகா தேவியும், தஞ்சனும் இருந்தனர். அப்போது தஞ்சனை தூங்க வைத்த சன்விகா தேவி, அருகில் உள்ள வீட்டிற்கு சென்றார். அப்பொழுது தூக்கத்தில் இருந்து எழுந்த தஞ்சன், எதிர்பாராதவிதமாக வீட்டின் முன்பு இருந்த வாளியில் தலை குப்புற விழுந்தார்.
வாளியில் நீர் இருந்ததால் குழந்தையால் கூச்சலிட முடியவில்லை. இதனை சில நேரம் கழித்து பார்த்த அக்கம்பக்கத்தினர், ஓடி வந்து குழந்தையை மீட்டனர். தொடர்ந்து குழந்தை அந்தப் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
ஆனால், அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர். சம்பவம் குறித்து அனுப்பர்பாளையம் போலிஸார் தகவல் அளிக்கப்பட்டது. அதன் பிறகு சம்பவ இடத்திற்கு சென்ற போலிஸார் குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக் கொள்கையில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். வாளியில் உள்ள நீரில் மூழ்கி 11 மாத குழந்தை பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Also Read
-
கொளத்தூரில் ஒரே நாளில் அடுக்கடுக்கான திட்டங்களை தொடங்கிவைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்!: முழு விவரம் உள்ளே!
-
நாள்தோறும் புது புது சாதனைகள்! - பச்சிளங் குழந்தைகள் பராமரிப்பில் தமிழ்நாடு முதலிடம்!
-
10 ஆண்டுகள் கழித்து.. UPSC டாப் 10-ல் இடம்பிடித்த தமிழ்நாடு மாணவர்கள் : தூத்துக்குடியில் உதயநிதி பேச்சு!
-
தூத்துக்குடியில் ரூ.178 கோடியில் மருத்துவமனைக் கட்டடங்கள், வகுப்பறைகள் திறப்பு! - முழு விவரம் உள்ளே!
-
“விசுவாசத்துக்கு அடையாளம் OPS.. நிதிஷ்குமாரின் கதிதான் பழனிசாமிக்கும்”: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!