Tamilnadu
"அதிகரிக்கும் தொற்று.. தமிழ்நாட்டில் புதிய கட்டுப்பாடுகள்?" : அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியது என்ன?
மறைந்த கவிஞர் கண்ணதாசன் அவர்களின் 96வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை தியாகராய நகரில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர்கள் மு.பே.சாமிநாதன் மா.சுப்பிரமணியன் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், "தமிழ்நாடு அரசின் அரசவை கவிஞராக, தமிழ் மண்ணுக்கு பெருமை சேர்த்தவர் கவிஞர் கண்ணதாசன்.
அ.தி.முக பொதுக்குழு குறித்து பேசி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை என முதலமைச்சர் ஏற்கனவே தெரிவித்துள்ளார். அ.தி.மு.க-வின் தற்போதைய நிலை நகைச்சுவையாக மாறியிருக்கிறது. நடக்கும் அத்தனையும் மக்கள் கூர்ந்து கவனித்து வருகிறார்கள்.
கொரோனா பரவல் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் தினசரி 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மகாராஷ்டிரா, டெல்லி ஆகிய மாநிலங்களில் தொற்று இரட்டிப்பாகியுள்ளது.
ஒமிக்ரான் பொருத்தவரை பி ஏ -1 2 3 உள்ளிட்ட ஏழு வகையான தொற்று பரவி வருவதாகவும் தற்போது அதிகளவில் பிஎ 4, 5 வகைகளில் வைரஸ் அதிகமாக பரவி வருவதாகவும் தெரிவித்தார். மேலும் BA4, BA5 வைரஸ் தொற்று உயிர் கொல்லியாக இல்லாமல் வேகமாக பரவும் தன்மை கொண்டதாக உள்ளது.
தமிழகத்தில் நேற்று ஒரு நாளில் 1600 நபர்களுக்கு தொற்று பாதித்துள்ளது குறிப்பாக 92% நபர்கள் வீட்டில் தனிமைப் படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் ,மேலும் 8% நபர்கள் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.சென்னை ராஜீவ் காந்தி, ஸ்டான்லி, கீழ்ப்பாக்கம் உள்ளிட்ட அரசு மருத்துமனைகள் கொரோனா தனிப்பட்ட சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது.
மேலும் கிண்டி கிங்ஸ் மருத்துவமனை உறுதித் தன்மை குறித்த அறிக்கை விரைவில் வரும், கிங்ஸ் மருத்துவமனையில் மீண்டும் கொரோனா சிகிச்சைக்காக மாற்றுவதற்காக திட்டமிடப்பட்டு வருகிறது.
தற்போதையை சூழலில் தொற்று ஏற்படுவது அதிகரித்தாலும் உயிர் பாதிப்பு என்பது குறைவாகவே உள்ளது. அதேபோல் தொற்று வேகமாக பரவும் தன்மை கொண்டதால் பொதுமக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
குறிப்பாக பள்ளிக்குழந்தைகள் சிறுவர்களுக்கு சளி, காய்ச்சல் உள்ளிட்ட உபாதைகள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை நாடுவது அவசியம் என்றும் பள்ளி செல்லும் குழந்தைகளின் மீது பெற்றோர்கள் தனி கவனம் செலுத்தி கண்காணிப்பது அவசியம்.
சென்னையில் 122 இடங்களில் மூன்றுக்கும் மேற்பட்ட நபர்கள் தோற்று பாதித்தவர்களாக இருக்கிறார்கள். அந்த இடங்களில் மாநகராட்சி சார்பாக நோட்டீஸ் ஒட்டப்பட்டு கண்காணிக்கபட்டு வருகிறது. தமிழகத்தில் தொற்று பாதிப்பு அதிகரித்து வந்தாலும் தற்போதைக்கு புதிய கட்டுப்பாடுகள் எதுவும் கிடையாது மக்கள் எச்சரிக்கையாக இருந்தால் போதுமானது" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
ச்சீ... பெண்களை இழிவு செய்யும் அதிமுக நிர்வாகிகள்.. வேடிக்கை பார்க்கும் அதிமுக - பாஜக பெண் உறுப்பினர்கள்!
-
கிரிக்கெட்டின் சாம்ராஜ்ஜியம் 7ம் நம்பருக்கு ஓய்வு…தோனியின் சமூக வலைதளப் பதிவு வைரல்? - முழு விவரம் உள்ளே!
-
திமுக கூட்டணியில் விறுவிறுப்பாக நடைபெறும் தொகுதி பங்கீடு.. -6 கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் எத்தனை?
-
வாக்காளர்களே... வாக்களிக்கும்போது அடையாள அட்டை கட்டாயம்.. என்னென்ன ஆவணங்கள் தேவை? - விவரம்!
-
“பாஜகவை வீழ்த்துவதுதான் முதல் குறிக்கோள்!” : திமுக - CPI இடையே முடிந்த தொகுதி உடன்பாடு - விவரம் உள்ளே!