Tamilnadu
கவுன்சிலரின் கை விரலை துண்டாக வெட்டி வீசிய இளைஞர்.. பகீர் சம்பவத்தின் காரணம் என்ன?
ஹரியாணா மாநிலம், கர்னல் நகரில் உள்ள 13வது வார்டின் கவுன்சிலராக இஷ் குலாட்டி என்பவர் உள்ளார். இவரது வீட்டின் அருகே கார் பார்க்கிங் இருந்தும் தனது காரை பக்கத்து வீட்டின் அருகே தொடர்ந்து நிறுத்தி வந்துள்ளார். அந்த வீட்டில் இருக்கும் மூத்த தம்பதிகள் இது குறித்து கவுன்சிலர் இஷ் குலாட்டியிடம் கூறியும் அவர் தொடர்ந்து காரை இவர்கள் வீட்டின் அருகேதான் விட்டு வந்துள்ளார்.
இந்நிலையில் மூத்த தம்பதிகளின் மகன் ஜிதேந்திர குமார் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அவர்கள் கவுன்சிலரின் அராஜக நடவடிக்கை குறித்துக் கூறியுள்ளனர்.
இதையடுத்து நேற்று வழக்கம்போல் கவுன்சிலர் இஷ் குலாட்டி வழக்கம்போல் பக்கத்து வீட்டின் அருகே காரை நிறுத்தியுள்ளார். அங்கு வந்த ஜிதேந்திர குமார், 'ஏன் இங்கு காரை நிறுத்துகிறீர்கள். உங்கள் வீட்டிலேயே இடம் இருக்கிறதே அங்கியே நிறுத்துங்கள்' என கூறியுள்ளார்.
இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ஜிதேந்திர குமார் வீட்டிற்குள் சென்று கத்தி ஒன்றை எடுத்து வந்து கவுன்சிலர் இஷ் குலாட்டியின் கை விரலைத் துண்டாக வெட்டியுள்ளார்.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் கவுன்சிலரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து கவுன்சிலரின் கை விரலை விட்டிய ஜிதேந்திர குமாரை போலிஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Also Read
-
“வரலாற்றின் தொடர்ச்சியாக...நாம் விடுக்கும் அறைகூவல்!” : திமுக சார்பில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டங்கள்!
-
சாகித்ய அகாடமி நிறுத்தப்பட்டால் என்ன...“செம்மொழி இலக்கிய விருது” உள்ளது! : முதல்வரின் அதிரடி அறிவிப்பு!
-
“தமிழ்நாட்டின் ஒவ்வொரு வீட்டிலும் அறிவுத்தீ பரவ வேண்டும்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
சென்னை மக்களே... இனி காற்றின் தரம் பற்றி நீங்களே தெரிஞ்சுக்கலாம்.. வருகிறது டிஜிட்டல் பலகை... - விவரம்!
-
“இருங்க பாய்... உங்க மூளைய இப்போ கசக்க வேண்டாம்...” - பழனிசாமியை குறிப்பிட்டு அமைச்சர் TRB ராஜா கலாய்!