Tamilnadu
3 ஆண்டுகள் தலைமறைவு.. தேச துரோக வழக்கில் தேடப்பட்ட குற்றவாளி கைது - ஏர்போர்ட்டில் நடந்த ‘பகீர்’ சம்பவம்!
பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஹா்ப்ரீத் சிங் (26). இவர்மீது பஞ்சாப் மாநில அரசின் போலீஸ் கடந்த 2020 ஆம் ஆண்டு தேசத்துரோக வழக்கு, மற்றும் தீவிரவாத செயல்களுக்கு எதிரான வழக்குகளான 127 A உள்ளிட்ட சில பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனா். அதோடு அவரை கைது செய்ய தேடி வந்தனர்.
ஆனால் ஹா்ப்ரீத் சிங் போலிஸாரிடம் சிக்காமல் தலைமறைவாக இருந்தாா். அதோடு வெளிநாட்டிக்கு தப்பி சென்றுவிட்டாா். இதையடுத்து பஞ்சாப் மாநில போலிஸ் டி.ஜி.பி, ஹா்ப்ரீத்சிங்கை தேடப்படும் தலைமறைவு குற்றவாளியாக அறிவித்தார். அதோடு அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும் அவா் மீது LOC போடப்பட்டிருந்தது.
இந்நிலையில் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து ஏர் விமானம் நேற்று சென்னை சா்வதேச விமான நிலையம் வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளை, சென்னை விமானநிலைய குடியுறிமை அதிகாரிகள், பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை கம்ப்யூட்டர் மூலம் பரிசோதித்தனா்.
அந்த விமானத்தில் ஹா்ப்ரீத் சிங்கும் வந்தாா். அவருடைய பாஸ்போா்ட், ஆவணங்களை கம்யூட்டா் மூலம் பரிசோதித்தபோது, இவர் கடந்த மூன்று ஆண்டுகளாக தேடப்பட்டு தலைமறைவு குற்றவாளி என்றும், இவர் மீது பஞ்சாப் போலிஸார் தீவிர தீவிரவாத தடுப்புச் சட்டம் மட்டும் தேசத்துரோக வழக்குகள் பதிவு செய்து, தேடி வருவதும் தெரியவந்தது.
இதையடுத்து ஹா்ப்ரீத் சிங்கை வெளியில் விடாமல் பிடித்து ஒரு அறையில் அடைத்து வைத்தனர். அதோடு பஞ்சாப் மாநில போலிஸாருக்கும் தகவல் கொடுத்தனா். பஞ்சாப் போலிஸார், ஹா்ப்ரீத் சிங்கை கைது செய்து, பஞ்சாப் மாநிலம் சண்டிகர் கொண்டு செல்வதற்காக, சென்னை விமான நிலையத்திற்கு வந்து கொண்டு இருக்கின்றனர்.
பஞ்சாப் மாநிலத்தை சோ்ந்த தீவிரவாத செயல்கள், மற்றும் தேச துரோக வழக்கில், கடந்த 3 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த தீவிரவாதி ஒருவர், சென்னை விமான நிலையத்தில் பிடிபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“கமலாலயத்தில் இருக்கவேண்டியவர் ஆர்.என்.ரவி...” - Left Right வாங்கிய அமைச்சர் ரகுபதி!
-
TET விவகாரம் : “ஆசிரியர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்யவேண்டும்..” - பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
-
திமுக ஆட்சியில் 34 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !
-
கோவையில் TN Rising : முதலமைச்சர் முன்னிலையில் ரூ.43,844 கோடியில் 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!
-
பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகங்கள்... அம்பலப்படுத்திய சு.வெங்கடேசன் எம்.பி.!