Tamilnadu
தூய்மைப் பணியாளர்கள் அமர இடவசதி.. மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவு!
தூய்மைப் பணியாளர்கள் அமர இடவசதி செய்து தர வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்குத் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-
அலுவலகங்களில் நாம் அமர்ந்து பணியாற்றும் அறைகளையும், உபயோகப்படுத்தும் ஓய்வறைகளையும் நாள்தோறும் தூய்மைப்பதும் தூய்மைப் பணியாளர்கள் அமர இடமின்றி அல்லாடுவதைப் பற்றி பலரும் என் கவனத்திற்குக் கொண்டு வருகின்றனர்.
நீங்கள் இதில் நேரடியாகத் தலையிட்டு பணிக்கு நடுவே அர்கள் அவ்வப்போது அமர்ந்து இளைப்பாறவும், மதியவேளைகளில் உட்கார்ந்து உணவருந்தவும், நீர் பருகவும் போதிய வசதிகளை ஏற்படுத்தித் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
புதிதாகக் கட்டப்படுகிற இடங்களிலும், அலுவலகங்களிலும் இத்தகைய வசதிகளை உள்ளடக்கத் திட்டவரை படத்தில் போதிய இடம் ஒதுக்குவது மிகவும் அவசியம்.
செய்து கொடுத்த வசதிகளை ஆவணப்படுத்தி என் பார்வைக்கு அனுப்புங்கள். மாவட்ட ஆட்சியரகத்தில் மட்டுமல்ல, மற்ற அலுவலகங்களிலும் பின்பற்ற வலியுறுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு வெ.இறையன்பு தெரிவித்துள்ளார்.
Also Read
-
ஒரே ஆண்டில் 17,702 பேருக்கு அரசு வேலை : சாதனை படைத்த TNPSC!
-
”பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் புகழ் தமிழுள்ள வரை போற்றப்படும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி!
-
GST வரி செலுத்துவோரின் சுமை எப்படி குறையும்? இதில் என்ன பெருமை இருக்கிறது?: மோடி அரசுக்கு முரசொலி கேள்வி!
-
“அணி அணியாய் பங்கெடுப்போம் - மக்கள் மனங்களை வெல்வோம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
கோரிக்கை வைத்த கல்லூரி மாணவி : வீட்டிற்கே சென்று நிறைவேற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி!