இந்தியா

”எதிர்க்கட்சி வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா வெற்றி வாய்ப்பு உறுதி”: தி.மு.க MP திருச்சி சிவா பேட்டி!

குடியரசுத் தலைவர் தேர்தலில் தி.மு.க தனது முடிவை மாற்றிக் கொள்ளாது என திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.

”எதிர்க்கட்சி வேட்பாளர்  யஷ்வந்த் சின்ஹா வெற்றி வாய்ப்பு உறுதி”: தி.மு.க MP திருச்சி சிவா பேட்டி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்திய நாட்டின் 14வது குடியரசுத் தலைவராக 2017ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட ராம்நாத் கோவிந்த் பதவிக்காலம் ஜூலை 25ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதற்கிடையில் குடியரசுத் தலைவர் தேர்தல் ஜூலை 18-ம் தேதி நடைபெறும் என தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அண்மையில் அறிவித்துள்ளார்.

இதையடுத்து காங்கிரஸ், தி.மு.க, கம்யூனிஸ்ட் கட்சிகள், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குடியரசு தலைவர் தேர்தலுக்கு பொது வேட்பாளரை நிறுத்துவது என முடிவு செய்தனர்.

”எதிர்க்கட்சி வேட்பாளர்  யஷ்வந்த் சின்ஹா வெற்றி வாய்ப்பு உறுதி”: தி.மு.க MP திருச்சி சிவா பேட்டி!

பின்னர், குடியரசு தலைவர் வேட்பாளர் குறித்து கடந்த வாரம் எதிர்க்கட்சிகள் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் மம்தா பானர்ஜி தலைமையில் ஆலோசனை நடத்தினர்.

இதையடுத்து இன்று சரத்பவார் தலைமையில் மீண்டும் ஆலோசனை நடைபெற்றது. இதில் குடியரசு தலைவர் தேர்தலில் எதிர்கட்சிகளின் பொது வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா போட்டியிடுவதாக ஒருமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.

”எதிர்க்கட்சி வேட்பாளர்  யஷ்வந்த் சின்ஹா வெற்றி வாய்ப்பு உறுதி”: தி.மு.க MP திருச்சி சிவா பேட்டி!

இந்நிலையில், குடியரசுத் தலைவர் தேர்தலில் தனது முடிவை தி.மு.க மாற்றிக் கொள்ளாது என மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய திருச்சி சிவா, "அரசியல் அனுபவம் நிறைந்தவர் யஷ்வந்த் சின்ஹா. இவரை குடியரசு தலைவர் தேர்தலில் பொது வேட்பாளராக நிறுத்த எதிர்க்கட்சிகள் ஒருமனதாக முடிவெடுத்துள்ளோம்.

குடியரசுத் தலைவர் தேர்தலில் தி.மு.க தனது முடிவை மாற்றிக் கொள்ளாது. யஷ்வந்த் சின்ஹா வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories