Tamilnadu

தமிழ் பாடத்தில் 100-க்கு100 மதிப்பெண் பெற்ற மாணவி.. மற்ற பாடங்களில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண் என்ன?

தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவை சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார்.

அதில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 94.07% மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் 97.22% தேர்ச்சியுடன் முதல் இடத்தையும், பெரம்பலூர் மாவட்டம் 2ம் இடத்தையும், விருதுநகர் மாவட்டம் 3ம் இடத்தையும் பிடித்துள்ளது. மேலும் 10ம் வகுப்பு தேர்வில் மாணவர்களை விட மாணவிகள் 8.55% கூடுதல் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தேர்வு முடிவுகளில் தமிழகத்திலேயே முதல் முறையாக தமிழ் பாடத்தில் ஒருவர் 100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளார். திருச்செந்தூர் அருகே காஞ்சி சங்கர அகாடமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் படித்து வரும் ஆறுமுகநேரி பகுதியை சார்ந்த காவலரின் மகள் தூர்கா இந்த சாதனையை படைத்துள்ளார்.

மேலும், ஆங்கிலத்தில் 45 பேர் 100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்னர். இதேபோல கணக்கு பாடத்தில் 2,186 பேரும் அறிவியலில் 3,841 பேரும், சமூக அறிவியலில் 1,009 பேரும் 100க்கு 100 மதிப்பெண் பெற்று அசத்தியுள்ளனர்.

Also Read: ராணுவத்துக்கு ஓய்வூதியம் கொடுக்காத மோடி ரூ.8500 கோடிக்கு விமானம் வாங்கியது ஏன்? : காங். சரமாரி கேள்வி!