Tamilnadu
பழையை Noodles-ஐ சூடு செய்து சாப்பிட்ட 2 வயது சிறுவன் பரிதாப பலி: திருச்சியில் சோகம்!
திருச்சி மாவட்டம், தாளக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட மருதமுத்து நகரைச் சேர்ந்த சேகர். இவரது மனைவி மகாலெட்சுமி. இந்த தம்பதியினரின் 2 வயது மகன் சாய் தருண். இவர் உடல் ஒவ்வாமையால் பாதிக்கப்பட்டு உடலில் ஒருவிதமான புண் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு தாய் மகாலெட்சுமி, சாய் தருணிக்கு நூடுல்ஸ் சமைத்து ஊட்டியுள்ளார். பிறகு மீதம் இருந்த நூடுல்ஸை ஃப்ரிட்ஜில் வைத்துள்ளார். பிறகு மறுநாள் காலையில் ஃப்ரிட்ஜில் இருந்த நூடுல்ஸை எடுத்து சூடுபடுத்தி மீண்டும் சிறுவனுக்கு உணவாக கொடுத்துள்ளார்.
இந்த நூடுல்ஸை சாப்பிட்ட சிறுவன் அன்று மாலைவரை வேறு எந்த உணவையும் உண்ணாமல் உடல் சோர்வாகக் காணப்பட்டுள்ளார்.இதனைத்தொடர்ந்து அன்று மாலை சிறுவன் திடீரென வாந்தி எடுத்து சுருண்டு கீழே விழுந்தார். இதனை பார்த்த அதிர்ச்சியடைந்த தாய் மகாலெட்சுமி சிறுவனைத் தூக்கிக்கொண்டு அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காகக் கொண்டு சென்றார். அங்கு சிறுவனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த கொள்ளிடம் போலிஸார் சிறுவன் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காகப் பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் ஏற்கனவே உடல் ஒவ்வாமையால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சிறுவன் துரித உணவான நூடுல்ஸை உண்டதால் ஃபுட் பாய்சன் ஏற்பட்டு இறந்திருக்கலாம் என தெரியவந்துள்ளது.
Also Read
-
“கமலாலயத்தில் இருக்கவேண்டியவர் ஆர்.என்.ரவி...” - Left Right வாங்கிய அமைச்சர் ரகுபதி!
-
TET விவகாரம் : “ஆசிரியர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்யவேண்டும்..” - பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
-
திமுக ஆட்சியில் 34 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !
-
கோவையில் TN Rising : முதலமைச்சர் முன்னிலையில் ரூ.43,844 கோடியில் 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!
-
பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகங்கள்... அம்பலப்படுத்திய சு.வெங்கடேசன் எம்.பி.!