Tamilnadu
வீட்டிற்குள் புகுந்த எலியை அடிக்க முயன்ற போது நடந்த விபரீதம்.. மயங்கி விழுந்து பெண் பரிதாப பலி!
சென்னை பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர், மகாலட்சுமி நகரை சேர்ந்தவர் லட்சுமி (35). இவரது வீட்டில் எலி ஒன்று புகுந்துள்ளது. மேலும் அந்த எலி வீட்டில் உள்ள முக்கிய பொருட்களை கடித்து குதறியுள்ளது. அதுமட்டுமல்லாது எலியைக் கூண்டு வைத்தும் எலி மருந்து வைத்து புடிக்கமுடியாமல் போனாது.
இதனால் ஆத்திரமடைந்த லட்சுமி எலியை அடித்து கொல்ல வேண்டும் என எண்ணி தனது 12 வயது மகனோடு சேர்ந்து அடிக்க முற்பட்டுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக வீட்டின் போர்டிக்கோவில் ஓடிவந்து எலியை அடிக்க முயன்றபோது எலி தப்பியோடியபின், மயங்கி கீழே விழுந்ததில் நெற்றியில் அடிப்பட்டு ரத்த காயம் ஏற்பட்டது.
உடனடியாக அவரது மகன் நடந்ததை தந்தையிடம் கூறி அருகில் உள்ள தனியார் மருத்துவவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கிருந்து குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று பரிசோதித்த போது இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
தகவலறிந்து வந்த சங்கர் நகர் போலிஸார் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து, லட்சுமி மயங்கி விழுந்தாரா அல்லது தடுக்கிவிழுந்து அடிப்பட்டதா, என்று விசாரித்து வருகின்றனர். மேலும் அவரது உடலை உடற்கூறு ஆய்வுக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“மாற்றம் எனச் சொல்லி.. அண்டப் புளுகை, ஆதவ் அர்ஜுனா புளுகாக மாற்றிவிட்டார்களோ?” : இ.பரந்தாமன் கண்டனம்!
-
ஒரே நாளில்... கோவையை தொடர்ந்து மதுரை.. கொலை நகரமாகும் தூங்கா நகரம்... வேடிக்கை பார்க்கும் தவெக அரசு!
-
விபரீதமான விளையாட்டு... வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் 8 பள்ளி மாணவர்கள் கைது.. கள்ளக்குறிச்சியில் பரபர!
-
“ஒன்னு மின்வெட்டு, இரண்டு அரிவாள் வெட்டு.. இதான் தவெக ஆட்சி” : முப்பெரும் விழாவில் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
“வேங்கைவயல் விவகாரத்தில் நீலிக்கண்ணீர்... மன்னிப்புக் கேட்க தயாரா?” : வன்னி அரசுக்கு கோவி.செழியன் கேள்வி!