Tamilnadu
ஜாலியாக ஊர் சுற்றி சொகுசாக வாழ இரயில் நிலையத்தில் செல்போன் திருட்டு.. காதல் ஜோடிகள் பகீர் தகவல்!
சென்னையில் பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கும் இடங்களில் சென்ட்ரல் இரயில் நிலையமும் ஒன்று. இங்கிருந்து தான் பிற மாவட்டங்கள் மட்டுமின்றி பிற மாநிலங்களுக்கும் இரயில்கள் செல்லும். எனவே இரயிலுக்காக காத்துக்கொண்டிருக்கும் பயணிகள் சில நேரங்களில் அங்கேயே அசந்து தூங்குவதும் உண்டு.
இவ்வாறாக பயணிகள் சிலர், தங்கள் மொபைல் போனை அருகில் இருக்கும் பிளக் பாயிண்ட்-ல் போட்டு விட்டு தூங்குவது அல்லது எங்கேயாவது செல்வர். அவ்வாறு அவர்கள் செய்யும்போது அவர்களின் மொபைல் போன்கள் திருடு போய் வந்தது.
இது சில நாட்களாக நடைபெற்று வந்த இந்த திருட்டு குறித்து, இரயில் நிலையத்திலேயே பயணிகள் சிலர் புகார் தெரிவித்தனர். எனவே காவல்துறையினர் அங்கு சி.சி.டி.வி கேமரா பொருத்தி கண்காணித்து வந்தனர். பின்னர் அதில் சிக்கிய நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்ட இரயில்வே காவல்துறையினர், காதல் ஜோடியை கைது செய்து நடவடிக்கை எடுத்தனர்.
அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், ஒருவர் ஆவடியை சேர்ந்த ஜெயஸ்ரீ (21) என்றும், மற்றவர்க திருவொற்றியூரைச் சேர்ந்த பார்த்திபன் (23) என்றும் ஆகிய இருவரும் காதல் ஜோடிகள் என்றும் தெரியவந்தது.
மேலும் இவர்கள் பயணிகளிடம் இருந்து செல்போனை திருடி, அதனை விற்று ஜாலியாக ஊர் சுற்றி சொகுசாக வாழ்ந்து வந்துள்ளதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் மீது சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Also Read
-
புத்தாண்டில் அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்ட CM MK Stalin: மிகை ஊதியம்,பொங்கல் பரிசு!
-
“2025 ஆம் ஆண்டு முடிவுற்று... 2026 ஆம் ஆண்டு பிறக்கிறது!” : முரசொலி தலையங்கம்!
-
பல்வேறு பணிகளுக்கு அடிக்கல் முதல் வீரர்களுக்கு ஊக்கத்தொகை வரை... துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அசத்தல்!
-
“2026-இல் மாபெரும் வெற்றியை நோக்கி முன்செல்கிறோம்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!
-
“கீழடி,பொருநைக்கு சென்று பார்க்கச் சொல்லுங்கள்” : தமிழிசை சௌந்தரராஜனுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி!