இந்தியா

தாடி இருந்தால் இனி திருமணம் கிடையாது - கிராம பஞ்சாயத்து முடிவால் இளைஞர்கள் அதிர்ச்சி!

தாடி இருந்தால் திருமணம் செய்ய அனுமதிக்க முடியாது என ராஜஸ்தானில் உள்ள கிராம பஞ்சாயத்து அதிரடியாக முடிவெடுத்துள்ளது.

தாடி இருந்தால் இனி திருமணம் கிடையாது - கிராம பஞ்சாயத்து முடிவால் இளைஞர்கள் அதிர்ச்சி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உலகம் முழுவதும் ஒவ்வொரு சமூகத்திலும் ஒவ்வொரு கலாச்சாரங்கள் கடைபிடிக்கப்படும். அது போல் இந்தியாவிலும் பல சமூகத்தை சார்ந்தவர்கள் பல்வேறு கலாச்சாரங்களை கடைபிடித்து வருகின்றன. அப்படியாக ராஜஸ்தான் மாநிலம் பாலி மாவட்டத்தில் உள்ள குமாவத் சமூகத்தைச் சேர்ந்த 19 கிராம பஞ்சாயத்துகள் புதிதாக ஒரு கலாச்சாரத்தை கொண்டுவந்துள்ளது.

தாடி இருந்தால் இனி திருமணம் கிடையாது - கிராம பஞ்சாயத்து முடிவால் இளைஞர்கள் அதிர்ச்சி!

அதாவது இனி அவர்களில் எந்த திருமணங்களிலும் மணமகனுக்கு தாடி இருக்க கூடாது என்றும், திருமண விழாவில் DJ என்று சொல்லப்படும் Disco Jockey-யும் அனுமதிக்கக்கூடாது என்று உறுதிமொழி எடுத்துள்ளனர்.

Fashion என்ற பெயரில் தாடி வைத்துகொண்டாலும், அதனை திருமணத்திற்கு வரும்போது அகற்றி விடவேண்டும். தாடியை முழுமையாக எடுக்கவில்லை என்றால், அவர்கள் திருமண நடைபெறாது என்றும் கிராம பஞ்சாயத்து குமாவத் சமூக மக்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

தாடி இருந்தால் இனி திருமணம் கிடையாது - கிராம பஞ்சாயத்து முடிவால் இளைஞர்கள் அதிர்ச்சி!

தாடி மட்டுமின்றி, அலங்காரங்கள், ஆடம்பர உடைகள், DJ டான்ஸ் என்று அனைத்திற்கும் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. ஏனென்றால், இதனை செய்தால் திருமணத்திற்கு ஆகும் வீண் செலவை கட்டுக்குள் வைத்துக்கொள்ள முடியும் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர். இதை மீறினால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு தண்டனையும் வழங்கப்படும் என்று கிராம பஞ்சாயத்து எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த உத்தரவு ராஜஸ்தான் மட்டுமல்ல, அங்கிருந்து வெளி மாநிலங்களுக்கு குடியேறியுள்ள ஒட்டுமொத்த குமாவத் சமூகத்திற்கும் பொருந்தும் என்றும் கூறியுள்ளது.

banner

Related Stories

Related Stories