Tamilnadu
”அந்த விளம்பரத்திற்கும் எனக்கும் சம்மந்தம் இல்லை”: நடிகர் சூரி பெயரை பயன்படுத்திய நிறுவனம்!
தமிழ்நாட்டில் 12ம் வகுப்புத் தேர்வுகள் முடிவடைந்ததை அடுத்து கல்லூரியில் மாணவர் சேர்க்கை அடுத்த மாதம் துவங்க உள்ளது. இதனால் பல கல்லூரி நிறுவனங்கள் தங்களது மாணவர் சேர்க்கை குறித்த விளம்பரங்களை வெளியிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், LM கல்வி அறக்கட்டளை நடிகர் சூரியின் புகைப்படத்தைப் பயன்படுத்தி 2022 - 23ம் ஆண்டுக்கான பொறியியல் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது என்றும் இது முற்றிலும் இலவசம் என விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளது.
மேலும் கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கு இலவச கல்வி உதவித் தொகையும் வழங்கப்படும் என்றும் இந்த நிகழ்ச்சியில் நடிகர் சூரி பங்கேற்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விளம்பரத்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்த நடிகர் சூரி, இது போலியானது யாரும் இதை நம்ப வேண்டாம் என்று கல்வியை வியாபாரம் ஆக்குவது இந்த சமுதாயத்துக்கு என்றுமே நல்லதில்லை என தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது சமூகவலைதளத்தில் நடிகர் சூரி வெளியிட்டுள்ள பதிவில், "இந்த விளம்பரத்துக்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. இந்த புகைப்படம் நான் சென்ற ஒரு நிகழ்வில் எடுக்கப்பட்டது. அதை வைத்து இப்படி ஒரு விளம்பரத்தை வடிவமைத்துள்ளனர்.
விளம்பரங்கள் செய்த நபர்களை அழைத்து இப்படி தவறான விளம்பரம் தர வேண்டாம் என சொல்லி இருக்கிறோம். மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். நாங்கள் செய்யும் கல்வி உதவிகள் தனிப்பட்ட முறையில் செய்து வருகிறோம்.
இந்த நிகழ்வுக்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. கல்வி உதவியின் பெயரால் இப்படி தவறான விளம்பரங்கள் தந்து புனிதமான கல்வியை வியாபாரம் ஆக்குவது இந்த சமுதாயத்துக்கு என்றுமே நல்லதில்லை" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!