Tamilnadu
‘திரை தீ பிடிக்கும்..’ : விக்ரம் படத்தில் சூர்யா வரும் சீனில் தீப்பற்றி எரிந்த திரை - பகீர் சம்பவம்!
புதுச்சேரி அருகே காலாப்பட்டு பகுதியில் உள்ள ஜெயா திரையரங்கில் நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள விக்ரம் படம் திரையிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று இரவு காட்சி ஓடிக்கொண்டிருக்கும் போது, திரையின் ஒரு பக்கத்தில் திடீரென தீப்பற்றி எரிய தொடங்கியது. இதனால் தியேட்டரில் படம் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் அலயறியடித்துகொண்டு தியேட்டரைவிட்டு வேகமாக வெளியேறினர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வீரர்கள் வருவதற்கு, திரை முற்றிலும் எரிந்து சாம்பலானது. முதற்கட்ட விசாரணையில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும் இச்சம்பவம் குறித்து காலாப்பட்டு போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
“எல்லாவற்றையும் செய்துவிட்டு வீட்டுக்குப்போய் ட்வீட்டா” : முதல்வர் விஜய்க்கு இ.பரந்தாமன் கடும் கண்டனம்!
-
“சட்டப்பேரவை மரபை மீறுகிறார் சபாநாயகர்.. திமுக மீதான அரசியல் தாக்குதல்” : எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம்!!
-
“முதலமைச்சரின் ‘மிசா’ பேச்சு, உடல்மொழி அநாகரிகமானது” : விஜயிக்கு கே.பாலகிருஷ்ணம் கடும் கண்டனம்!
-
‘சர்க்காரியா கமிஷன்’ - சட்டசபையில் அன்றே பதில் அளித்த கலைஞர்! (முழு தகவல்)
-
மிசா வரலாறு தெரியாமல் சகட்டுமேனிக்கு பேசக் கூடாது : அமைச்சர் நிர்மல்குமாருக்கு, பெ.சண்முகம் கடும் தாக்கு!