Tamilnadu
கடையின் முன்பு சிறுவர்களை கட்டிவைத்து விட்டு சென்ற பெற்றோர் - வைரல் வீடியோவின் பின்னணி என்ன?
புதுச்சேரியில் கடையின் முன்பு இரண்டு சிறுவர்களை கட்டிவைத்து விட்டு பெற்றோர்கள் சென்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
புதுச்சேரி மிஷன் வீதி - நேரு வீதி சந்திப்பில் உள்ள ஒரு கடையின் முன்பு, இரண்டு சிறுவர்கள் விளையாடி கொண்டிருந்தனர். அதில் ஒரு சிறுவன் இடுப்பில் கயிற்றால் கட்டப்பட்டு மறுமுனை கடையில் கட்டப்பட்டிருந்து.
இதனை பார்த்த சமூக ஆர்வலர் ஒருவர் இதனை வீடியோ பதிவு செய்து பல்வேறு வாட்ஸ்அப் குரூப்பில் அனுப்பினார். இதனை அறிந்த பலரும் அந்த இடத்திற்கு சென்று பார்த்தபோது, அருகில் இருந்த அவனது பெற்றோர் கயிற்றை அவித்து விட்டு விட்டு மீண்டும் சென்று விட்டனர்.
இதுகுறித்து போலிசாரிடம் விசாரித்ததில், நரிக்குறவர் குடும்பத்தை சார்ந்த சிலர் இதுபோன்று சிறுவர்களுடன் நகர பகுதிக்கு வந்து வியாபாரம் செய்யும் போது, சிறுவர்கள் தொலைந்து விடக்கூடாது என்பதற்காக அவர்களை கட்டிவைத்துவிட்டு செல்வதும், பின்னர் சிறிது நேரம் கழித்து அவர்களை அழைத்து செல்வதும் வாடிக்கையாக கொண்டுள்ளனர். இதுபோன்று சிறுவர்களை கட்டி வைக்கக்கூடாது என எச்சரித்து அனுப்பி வைத்ததாகவும் போலிசார் தெரிவித்தனர்.
Also Read
-
“திருக்குறளை தேசிய நூலாக ஆக்க வேண்டும்!” : உலகப் பொதுமறையை பறைசாற்றிய முரசொலி தலையங்கம்!
-
மூலிகை அழகுசாதனப் பொருட்கள் & தோல் பராமரிப்புப் பொருட்கள் தயாரித்தல் பயிற்சி - விண்ணப்பிப்பது எப்படி?
-
‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம்.. சென்னையில் முகாம்கள் நடைபெறும் நாள், இடங்கள் என்ன?- முழு விவரம் உள்ளே!
-
கடலூர், சிதம்பரம் மக்கள் கவனத்துக்கு... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள் என்ன ?
-
துணை வேந்தர் விவகாரம்... ஆளுநரின் நியமனம் செல்லாது : மீண்டும் மீண்டும் கொட்டுவைத்த உயர்நீதிமன்றம் !