Tamilnadu
சாலை விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடிய இளைஞர் - களத்தில் இறங்கி உதவிய அமைச்சர் பெரியசாமி !
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சாலையில் உள்ள இராமயன்பட்டி அருகே சுரேஷ் என்பவர் இருசக்கர வாகனத்தில் செல்லும் பொழுது எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கியுள்ளார். அப்போது அவ்வழியே சென்ற கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி இதனை உடனடியாக பார்த்து தனது காரை விட்டு இறங்கி வந்துளளார்.
பின்னர் சம்பவ இடத்தில் ஆபத்தான நிலையில் இருந்த சுரேஷை பார்த்துவிட்டு, போலிஸார் மற்றும் ஆம்புலன்ஸக்கு உடனடியாக தகவல் தெரிவித்து ஆம்புலன்சை வரவழைத்து சுரேஷ் என்பவரை ஆம்புலன்சில் ஏற்றி உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
மேலும் அமைச்சர் தனது தொலைபேசியில் அரசு மருத்துவமனையின் முதல்வரை அழைத்து சுரேஷ் என்பவரின் உயிரை காப்பாற்ற முதலுதவியும் மற்றும் மேல் சிகிச்சைக்கு பரிந்துரை செய்யுமாறு கூறினார். இதனை கூறிவிட்டு தான் அமைச்சர் இடத்தை விட்டு சென்றார் இதனால் அவ்விடத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
Also Read
-
”இடஒதுக்கீடு கொள்கையின் பிதாமகன் தமிழ்நாடு” : சட்டப்பேரவையில் அமைச்சர் கோவி.செழியன் பேச்சு!
-
”இன்ஸ்டா ரீல்ஸ் அரசியல் செய்யும் பழனிசாமி” : அமைச்சர் சிவசங்கர் பதிலடி!
-
தமிழ்நாட்டை தண்டிப்பது ஏன்? : ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு 10 கேள்விகளை எழுப்பிய அமைச்சர் தங்கம் தென்னரசு!
-
BLINKIT வணிக தளத்தில் ‘கூட்டுறவு நிறுவனங்களின் தயாரிப்புகள்!’ : முழு விவரம் உள்ளே!
-
இரட்டை இலக்கை எட்டிய தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி : பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு பெருமை!