Tamilnadu

நூல் ஏற்றுமதியாளரிடம் ரூ.1.25 கோடி மோசடி.. அ.தி.மு.க நிர்வாகி கைது - வழக்கில் சிக்கியது எப்படி !

கரூர் மாவட்டம் மண்மங்கலம் வட்டம் செம்மடையை சேர்ந்தவர் அசோக் ராம்குமார் (40). இவர் கரூரில் பனியன் ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் பல்லடம் அ.தி.மு.க. நகர செயலாளர் ராமமூர்த்தி (40) நடத்தி வருகிற சங்கீதா மில்ஸ் நிறுவனத்தில் நூல் கொடுத்து, துணியாக மாற்றி வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 2020ஆம் ஆண்டு 1 லட்சம் கிலோ நூலை, துணியாக மாற்றி தரும்படி கொடுத்துள்ளார். ஆனால் நூலை பெற்றுக்கொண்டு ராமமூர்த்தி துணியாக மாற்றி தராமல் இழுத்தடித்து வந்து வந்துள்ளார். இந்த நூலின் மதிப்பு ரூ.1.25 கோடியாகும்.

மேலும், இது தொடர்பாக அசோக் ராம்குமார் கேட்கும் போது, அவரை ராமமூர்த்தி மிரட்டியுள்ளார். தொடர்ந்து மோசடியில் ஈடுபட்ட பல்லடம் அ.தி.மு.க. நகர செயலாளர் ராமமூர்த்தி மீது நடவடிக்கை எடுக்கும்படி திருப்பூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் அசோக் ராம்குமார் புகார் கொடுத்தார்.

அதன்படி ராமூர்த்தி மீது கடந்த 30ந் தேதி போலிஸார் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில் ராமமூர்த்தியை குற்றப்பிரிவு போலிஸார் கைது செய்தனர். மேலும், ராமமூர்த்தியின் மில்லில் காசளராக பணியாற்றிய சங்கர் கணேஷ் மீது வழக்கு பதிவு செய்து போலிஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Also Read: ‘திவ்யா.P VS திவ்யா பாண்டே..’ UPSC தேர்ச்சியில் நடந்த குழப்பம் - மாணவிக்கு காத்திருத்த அதிர்ச்சி!