Tamilnadu
சென்ட்ரல் ஸ்டேஷனில் காணாமல்போன 1.5வயது குழந்தை 30 நிமிடத்தில் மீட்கப்பட்டது எப்படி? ரயில்வே போலிஸ் அதிரடி
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தவறவிட்ட ஒன்றரை வயது ஆண் குழந்தை 30 நிமிடத்தில் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர் ரயில்வே போலிஸார்.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்த வினோத் குமார், லதா தம்பதியினரின் ஒன்றரை வயது மகன் ருத்விக். குடும்பத்துடன் திருப்பதி சென்று மகனுக்கு மொட்டை அடித்த நிலையில் மீண்டும் விசாகப்பட்டினம் செல்வதற்காக, இன்று அதிகாலை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்துள்ளனர்.
இந்நிலையில் திடீரென ஒன்றரை வயது மகன் ருத்விக் காணாமல் போனதையடுத்து பெற்றோர்கள் உடனடியாக ரயில்வே அதிகாரிகள் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை உதவியை அணுகினர்.
ரயில் நிலையத்தில் காணாமல் குழந்தையை மீட்க உடனடியாக ரயில்வே பாதுகாப்பு படை முதன்மை ஆணையர் செந்தில் குமரேசன் தலைமையில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.
இதையடுத்து குழந்தையை சுமார் 30 நிமிடத்தில் சிசிடிவி காட்சி உதவியுடன் ரயில்வே அதிகாரிகள் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை போலிஸார் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்து, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து 7.25 மணி நிமிடத்திற்கு புறப்பட்ட இருந்த ஜனசதாப்தி விரைவு ரயிலில் விசாகப்பட்டினம் அனுப்பி வைத்தனர்.
Also Read
-
அதிகாலையிலேயே 7 மீனவர்கள் கைது.. உடனடியாக விடுவிக்கக் கோரி ஒன்றிய அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்!
-
750+ திரைப்படங்கள்... பத்ம ஸ்ரீ விருது.. ஒருமுறை MLA... - பிரபல நடிகர் கோட்டா சீனிவாச ராவ் காலமானார்!
-
திருவண்ணாமலை மக்கள் வசதிக்காக.. விடியல் பேருந்து & AC பேருந்துகளை தொடங்கி வைத்தார் துணை முதலமைச்சர்!
-
திருவள்ளூரில் ரயில் தீ பிடித்து விபத்து... 3 தண்டவாளங்கள் சேதம்... 8 எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து !
-
“தி.மு.கழகத் தொண்டர்களின் உழைப்பை ஒருபோதும் மறந்ததில்லை!” : கழகத் தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!