தமிழ்நாடு

அரைகுறை உடையணிந்து டிக்கெட் இன்றி ரயிலில் அட்டூழியம் செய்த வடமாநிலத்தவர்கள்.. கதறும் பெண் பயணிகள்!

முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் வடமாநிலத்தவர்கள் அட்டகாசம் செய்ததால் செங்கல்பட்டில் ரயிலை நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்ட பயணிகள்.

அரைகுறை உடையணிந்து டிக்கெட் இன்றி ரயிலில் அட்டூழியம் செய்த வடமாநிலத்தவர்கள்.. கதறும் பெண் பயணிகள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் ஹவுராவில் இருந்து கன்னியாகுமரி சென்ற அதிவிரைவு ரயிலில் அதிக அளவிலான வடமாநிலத்தவர்கள் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் பயணித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கொல்கத்தாவில் இருந்து கன்னியாகுமரிக்கு இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயிலில் அதிக அளவிலான வடமாநிலத்தவர்கள் பயணம் செய்துள்ளனர். சென்னை எழும்பூர் வந்த நிலையில் முன்பதிவு பெட்டிகளில் முன்பதிவு செய்தவர்களுக்கு பதிலாக சுமார் 200க்கும் மேற்பட்ட வடமாநிலத்தவர்கள் பயணம் செய்துள்ளனர்.

அரைகுறை உடையணிந்து டிக்கெட் இன்றி ரயிலில் அட்டூழியம் செய்த வடமாநிலத்தவர்கள்.. கதறும் பெண் பயணிகள்!

முன்பதிவு செய்தவர்களின் இருக்கைகளில் அமர்ந்ததால் வடமாநிலத்தவர்கள், தமிழர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அதிகமாக பெண்கள் பயணித்த பெட்டிகளில் அரைகுறை ஆடைகளுடன் வடமாநிலத்தவர்கள் பயணித்த நிலையில் பெண்கள் இரண்டு மூன்று முறை ரயிலை நிறுத்தி வாக்குவிதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் பயணிகளுக்காக ரயில் நிறுத்தப்பட்ட நிலையில் ரயில்வே ஊழியர்களிடம் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பெண்கள் குழந்தைகள் என முன்பதிவு செய்து செல்லும் ரயில்களில் முறையான பயணச்சீட்டு இன்றி அதிக அளவிலான வடமாநிலத்தவர்கள் பயணம் செய்வதால் பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

அரைகுறை உடையணிந்து டிக்கெட் இன்றி ரயிலில் அட்டூழியம் செய்த வடமாநிலத்தவர்கள்.. கதறும் பெண் பயணிகள்!

இரவு நேரங்களில் பயணிக்கும் பெண்கள், கர்ப்பிணிகள் என யாரும் கழிவறைக்கு செல்லமுடியாமல் அவதிப்பட்டு வருவதாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் பல முறை இந்த சம்பவங்கள் குறித்து தகவல் தெரிவிக்க அவசர எண்ணை பயன்படுத்தியும் எந்தவித நடவடிக்கைகளும் இல்லை என குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இதனால் 1 மணி நேரத்திற்கு மேலாக செங்கல்பட்டு ரயில் நிலைய அதிகாரியை முற்றுகையிட்டு பயணிகள் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். ரயிலில் ஏறிய வடமாநிலத்தவர்கள் ஒருவர் கூட முறையான டிக்கெட் பெறாமல் முன்பதிவு பெட்டிகளில் ஏறி அராஜத்தில் ஈடுபட்டதால் பயணிள் பெரும் அவதியுற்றனர்.

அரைகுறை உடையணிந்து டிக்கெட் இன்றி ரயிலில் அட்டூழியம் செய்த வடமாநிலத்தவர்கள்.. கதறும் பெண் பயணிகள்!

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே மற்றும் செங்கல்பட்டு நகர போலிஸார் முன்பதிவு பெட்டிகளில் இருந்த வடமாநிலத்தவர்களை இறக்கி வேறு இரயில்களில் அனுப்பி வைத்தனர். தமிழகத்தில் அதிக அளவிலான வடமாநிலத்தவர்கள் வேலைக்கு வரும் நிலையில் முன்பதிவு பெட்டிகளில் ஏறி அமர்த்து அராஜகத்தில் ஈடுபடுவதாக ரயில் பயணிகள் குற்றச்சாட்டு தெரிவித்தனர்.

banner

Related Stories

Related Stories