Tamilnadu
செல்போனை பறித்துச் சென்று தப்பிய இளைஞர்கள்.. துணிச்சலுடன் விரட்டிப் பிடித்து போலிஸிடம் ஒப்படைத்த பெண்!
சென்னை மந்தவெளி பகுதியில் தேவி என்ற பெண் சாலையோரமாக நின்றுகொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 2 இளைஞர்கள் தேவியின் கையிலிருந்து செல்போனை பறித்துக் கொண்டு வேகமாகத் தப்பிச் சென்றனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த தேவி உடனே தனது இருசக்கர வாகனத்தில் அவர்களை பின் தொடர்ந்துள்ளார். இவர் பின்தொடர்வதை அறிந்த அவர்கள் வாகனத்தை வேகமாக இயக்கியுள்ளனர். இந்நிலையில் அடையாறு கஸ்தூரிபாய் நகர் 2வது குறுக்கு தெருவில் சென்று கொண்டிருந்தபோது இளைஞர்கள் சென்ற வாகனம் நிலைதடுமாறியுள்ளது.
இதனால் அவர்களது வாகனம் சாலையோரம் இருந்த பாதாளச் சாக்கடை குழியில் விழுந்துள்ளது. இதையடுத்து பின்னால் வந்த தேவி அவர்கள் இருவரையும் பிடித்துக் கூச்சலிட்டுள்ளார். பிறகு அங்கு கூடிய பொதுமக்கள் 2 பேரும் தப்பித்து விடாமல் இருக்கும்படி அவர்களது கைகளை கட்டி சிறைபிடித்துள்ளனர்.
பின்னர் உடனே இது குறித்து போலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அங்கு வந்த போலிஸார் பொதுமக்களிடம் இருந்து அவர்களை மீட்டு விசாரணை நடத்தினர். இதில் செல்போனை பறித்தவர்கள் சஞ்சய், கார்த்திக் என்பது தெரியவந்தது.
பிறகு அவர்களிடம் இருந்த செல்போனை மீட்ட போலிஸார் அதை தேவியிடம் ஒப்படைத்தனர். மேலும் அவர்கள் பயன்படுத்திய இரு சக்கர வாகனத்தையும் போலிஸார் பிறமுதல் செய்து 2 பேரையும் கைது செய்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
”தலைநகரில் பேரறிஞர் அண்ணா சிலையின் மீது இழுக்கு… கொள்கையில்லா த.வெ.க கோமாளிகளின் அட்டூழியம்”
-
“காங்கிரஸின் குணம் வெளியானது... தோல்வியும் துரோகமும் எங்களுக்கு புதிது அல்ல”: டி.ஆர்.பாலு MP விளாசல்!
-
பி.எம் ஸ்ரீ திட்டத்தில் தமிழ்நாடு இணையுமா? – ஒன்றிய அரசின் விவகாரம் – விஜய் எடுக்கும் முடிவு என்ன?
-
பெண்கள் பாதுகாப்பின் லட்சணம்... வாக்குப்பதிவு நாளில் சிறுமிக்கு பாலியல் தொல்லை.. TVK நிர்வாகி கைது!
-
“த.வெ.க.வினால் தலைகுனியும் தமிழ்நாடு” : தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு!