Tamilnadu
முழு போதையில் பெற்ற மகள்களை சரமாரியாக தாக்கிக் கொன்ற கொடூர தந்தை.. விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல்!
அதீத குடிபோதையில் இரண்டு சிறுமிகளை கட்டையால் கொடூரமாக அடித்து கொலை செய்த தந்தை கைது.
காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூர் ஒரகடம் அடுத்த சின்ன மதுரபாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜு. இவர் எந்த ஒரு வேலைக்கும் செல்லாமல் தினசரி மது அருந்திவிட்டு வீட்டில் தகராறு செய்து வந்துள்ளார்.
இவருடைய மனைவி தனியார் தொழிற்சாலையில் கூலித் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இந்த தம்பதிகளுக்கு மூன்று மகள்கள் ஒரு மகன் இருந்த நிலையில் கடந்த மாதம் இவருடைய தொல்லை தாங்காமல் 14 வயது சிறுமி நதியா தீயிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதைத்தொடர்ந்து மீண்டும் மது போதையில் எப்போதும் இருக்கும் கோவிந்தராஜ் தனது குடும்பத்தாருடன் தொடர்ச்சியாக சண்டையிட்டு வந்துள்ளார்.
இந்நிலையில் இன்று இவருடைய மூத்த மகள் 16 வயதான நந்தினி 11ஆம் வகுப்பு படித்து வருகிறார், நான்காம் வகுப்பு படித்து வரும் 9 வயது சிறுமி தீபா இருவரும் வீட்டில் இருந்து இருக்கிறார்கள்.
வழக்கம்போல் இன்று பகல் மது வாங்கி குடித்துவிட்டு அதிக போதையில் வீட்டுக்கு வந்துள்ளார். இதனால் இரு மகள்களும் கோவிந்தராஜுவிடம் சண்டை போட்டிருக்கிறார்கள்.
முழு மது போதையில் இருந்த கோவிந்தராஜு கட்டையால் இரு மகள்களையும் கொடூரமாக தாக்கி அடித்து கொலை செய்திருக்கிறார்.
இதைத்தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் கோவிந்தராஜுவை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்திருக்கிறார்கள். மது போதையில் தனது இரு மகள்களையும் அடித்துக்கொன்ற தந்தையால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Also Read
-
அழகுபடுத்தப்படும் சென்னையின் முக்கிய ரயில் பாதைகள் : ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது மெட்ரோ நிர்வாகம் !
-
முடிவடையும் இஸ்ரேல் - காசா போர் : அமைதி ஒப்பந்தத்துக்கு ஹமாஸ் ஒப்புதல் அளித்ததாக டிரம்ப் அறிவிப்பு !
-
இலங்கை கடற்படையால் 30 மீனவர்கள் கைது : நடவடிக்கை கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம் !
-
ரூ.49.59 கோடி - 23 புதிய திட்டப்பணிகள் : 5478 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர்!
-
சுற்றுலா தொகுப்புகள் மூலமாக தமிழ்நாடு அரசுக்கு 2.37 கோடி வருவாய் : அமைச்சர் இரா.இராஜேந்திரன் தகவல்!