இந்தியா

‘கல்யாண ஆசை..’ குறைதீர்ப்பு கூட்டத்தில் வினோத கோரிக்கை வைத்த முதியவர் - பதில் அளித்த அமைச்சர் ரோஜா!

ஆந்திராவில் அமைச்சரின் முதியவர் ஒருவர் தனக்கு திருமணம் செய்து வைக்க கோரிக்கை வைத்த சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது.

‘கல்யாண ஆசை..’ குறைதீர்ப்பு கூட்டத்தில் வினோத கோரிக்கை வைத்த முதியவர் - பதில் அளித்த அமைச்சர் ரோஜா!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

ஆந்திர மாநிலத்தில் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வருகிறது. மாநிலம் முழுவதும் பல்வேறு திட்டங்கள் மூலம் மக்கள் மத்தியில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளது.

அதுமட்டுமல்லாது, அம்மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி, அனைத்து அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் தங்களின் தொகுதிகளுக்கு நேரடியாக சென்று, மக்களின் குறைகளை கேட்டு, அவற்றை சரிசெய்யவேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், ஆந்திர மாநிலத்தின் சுற்றுலாத்துறை அமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ரோஜா, தனது சட்டமன்ற தொகுதிக்குச் சென்று மக்களின் குறைகளைக் கேட்டுவந்தார். அப்போது பொதுமக்களும் தங்களின் குறைகளை கூறி, அதனை மனுவாகவும் அமைச்சரிடம் கொடுத்தனர்.

இதனிடையே அமைச்சர் ரோஜாவிடம் பேச வந்த முதியவர் ஒருவர், ‘எனக்கு அரசின் உதவித்தொகை கிடைக்கிறது. ஆனால் வயதான காலத்தில் என்னைப் பார்த்துக்கொள்ள யாரிம் இல்லை. எனவே எனக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும்’ எனக்கேட்டுள்ளார்.

உடனே அருகில் இருந்த கட்சித் தொண்டர்கள், இதனைக் கேட்டதுமே சிரித்துவிட்டனர். இந்த பதிலை எதிர்பார்க்காத அமைச்சர் ரோஜாவும் சிரித்துவிட்டு, ‘அரசு உதவித்தொகை மட்டுமே செய்து உதவி செய்ய முடியும்; திருமணம் செய்து வைக்க முடியாது’ எனக் கூறினார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிரிது நேரம் சிரிப்பலைகள் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories