Tamilnadu
அடுத்தடுத்து தற்கொலை செய்து கொள்ளும் இளம் நடிகைகள்.. கேரளாவை அடுத்து Bengal நடிகை தூக்கிட்டு தற்கொலை!
மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர் பல்லபி டேய். இவர் வங்க மொழி டி.வி தொடர்களில் நடித்து வந்தார். இவர் கொல்கத்தாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வாடகைக்கு வீடு எடுத்துத் தங்கி வசித்து. இந்நிலையில் நேற்று திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது ஆண் நண்பர் இது குறித்து போலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
பிறகு அங்கு வந்த போலிஸார் நடிகை பல்லபி டேயின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவரது வீட்டைஆய்வு செய்தபோது தற்கொலை கடிதம் எதுவும் கிடைக்கவில்லை. அதேபோல் அவரது உடலில் எந்த காயங்களும் இல்லை என போலிஸார் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் தங்கள் மகள் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என அவரது பெற்றோர்கள் புகார் அளித்துள்ளனர். தற்கொலைக்கு முன்தினம் தான் தொலைபேசியில் தொடர்பு கொண்டு சில உணவுகளை எப்படித் தயாரிப்பது என கேட்டதாக அவரது பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் போலிஸார் நடிகை பல்லபி டேயின் மர்ம மரணம் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த வாரம்தான் கேரளாவில், இளம் நடிகை ஷகானா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்போது மேற்குவங்கத்தைச் சேர்ந்த நடிகையும் தற்கொலை செய்து கொண்டுள்ளது திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“‘அமித்ஷாவே சரணம்’ என்று சரண்டர் ஆகிவிட்டார் பழனிசாமி!” : தமிழ்நாட்டு துரோகிகளுக்கு முதலமைச்சர் கண்டனம்!
-
“தலைமுறை தலைமுறையாக போராடி பெற்ற உரிமைகளை, நாமே பறிபோக அனுமதிக்கலாமா?” : கரூரில் முதலமைச்சர் எழுச்சியுரை!
-
“திராவிட முன்னேற்றக் கழகம் பிறந்தது; தமிழ்நாட்டிற்கான வழி திறந்தது!” : கனிமொழி எம்.பி திட்டவட்டம்!
-
”திமுக-வை எந்த கொம்பனாலும் தொட்டுக்கூட பார்க்க முடியாது” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனல் பேச்சு!
-
தி.மு.க முப்பெரும் விழா : கனிமொழி MP-க்கு பெரியார் விருது வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!