Tamilnadu

மாநிலங்களவை தேர்தல்.. தி.மு.க வேட்பாளர் பட்டியல் வெளியீடு: காங்கிரஸுக்கு ஒரு இடம் ஒதுக்கீடு!

தமிழ்நாடு உள்ளிட்ட 15 மாநிலங்களில் காலியாக உள்ள 57 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் ஜூன் 10ல் நடைபெறும் என இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை டி.கே.எஸ் இளங்கோவன், நவநீத கிருஷ்ணன், ஆர்.எஸ் பாரதி, எஸ்.ஆர் பாலசுப்ரமணியன், ஏ.விஜயகுமார், கே.ஆர்.என் ராஜேஷ்குமார் ஆகிய 6 பேரின் பதவிக்காலம் ஜூன் 29ல் நிறைவு பெறுகிறது.

இதனால் தமிழ்நாட்டில் 6 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான இடங்கள் காலியாகிறது. இதன் காரணமாக 6 இடங்களுக்கும் ஜூன் 10ம்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் பட்டியலை முதலமைச்சரும், தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.

இது குறித்து முதலமைச்சரும், தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், "2022 ஜூன் 10 அன்று நடைபெறவிருக்கும் ஆறு மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தலில் தி.மு.க கூட்டணிக்காக 4 இடங்களில், இந்திய தேசிய காங்கிரசுக்கு ஒரு இடம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

3 இடங்களுக்கான மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில், திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்களாகத் தஞ்சை, தஞ்சை சு. கல்யாணசுந்தரம், கே.ஆர்.என். ராஜேஸ்குமார், இரா. கிரிராஜன் ஆகியோர் போட்டியிடுவார்கள்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: “அவர் எனக்கு உதவியாளராக வரனும் என கலைஞர் சொன்னார்” : சண்முகநாதன் இல்லவிழாவில் முதல்வர் நெகிழ்ச்சி பேச்சு!