Tamilnadu
படிக்காமல் படம் வரைந்த மகளை திட்டிய தாய்.. மனமுடைந்த மாணவியின் செயலால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்!
சென்னை, திருவேற்காடு அடுத்த சின்ன கோலடி பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி சரண்யா. இந்த தம்பதிக்கு ஜனனி என்ற மகள் இருந்தார். இவர் அதேபகுதியில் உள்ள பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்தார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜனனி, வீட்டில் படிக்காமல் வரைபடம் வரைந்து கொண்டிருந்துள்ளார். இதைப்பார்த்த அவரது தாய் படிக்காமல் ஏன் வரைபடம் வரைகிறாய் என திட்டியுள்ளார்.
இதனால் மனமுடைந்த ஜனனி வீட்டில் உள்ள புடவையால் தூக்கு மாட்டி தற்கொலை முயற்சி செய்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் மகளை மீட்டு எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்துள்ளனர்.
அங்குச் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், மாணவி ஜனனி சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தாய் கண்டித்ததால் ஆறாம் வகுப்பு மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“பருவமழையை எதிர்கொள்ள ஒருங்கிணைவோம்!” : ஆய்வுக் கூட்டத்தில் துணை முதலமைச்சர் தெரிவித்தது என்ன?
-
”நிச்சயம் வெள்ள பாதிப்பு இருக்காது” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதி!
-
”தடைகளை உடைத்து மாணவர்களின் கனவுகளை நிறைவேற்றும் முதலமைச்சர்” : அமைச்சர் கோ.வி.செழியன் பேச்சு!
-
சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் அடுத்த நடவடிக்கை! : 2 புதிய அங்கன்வாடி மையங்கள் திறப்பு!
-
புதிய உச்சத்தை அடைந்துள்ளது ஆவின் பால் உப பொருட்கள் : பெருமையுன் சொன்ன அமைச்சர் மனோ தங்கராஜ்!