தமிழ்நாடு

திடீரென பற்றி எரிந்த தீ.. ஓடும் காரிலிருந்து வெளியேறிய ஐவர்.. குரோம்பேட்டை GST சாலையில் நடந்தது என்ன?

சென்னை குரோம்பேட்டையில் ஓடும் கார் தீப்பிடித்து எரிந்தது, 5 பேர் நல்வாய்ப்பாக உயிர்தப்பினர்

திடீரென பற்றி எரிந்த தீ.. ஓடும் காரிலிருந்து வெளியேறிய ஐவர்.. குரோம்பேட்டை GST சாலையில் நடந்தது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை குரோம்பேட்டையில் சாலையில் சென்றுக்கொண்டிருந்த காரில் திடீர் தீவிபத்து ஏற்பட்டிருக்கிறது. அதில் பயணித்த 5 பேரும் உடனடியாக வெளியேறியதால் நல்வாய்ப்பாக உயிர்தப்பினர்.

சென்னை பழைய பல்லாவரத்தை சேர்ந்த பூபதி (35). இவர் தனது உறவினர்களுடன் செஞ்சியில் நடைபெறும் சுப நிகழ்ச்சிக்கு செல்ல தாம்பரம் வழியாகக சென்ற போது குரோம்பேட்டை பேருந்து நிறுத்தம் அருகே ஜி.எஸ்.டி சாலையில் காரில் இயந்திர கோளாறு ஏற்பட்டு புகை கிளம்பியிருக்கிறது.

திடீரென பற்றி எரிந்த தீ.. ஓடும் காரிலிருந்து வெளியேறிய ஐவர்.. குரோம்பேட்டை GST சாலையில் நடந்தது என்ன?

இதனை கண்டதும் காரில் பயணித்த 5 பேரும் காரிலிருந்து உடனடியாக வெளியேறினார்கள். சிறிது நேரத்தில் காரில் தீப்பிக்க தொடங்கியது. பின்னர் தீ மளமளவென பரவி கார் முழுவதும் எரிந்தது. இதனையடுத்து தாம்பரம் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட உடன் லீடிங் பையர் மேன் கண்ணதாசன் தலைமையில் விரைந்து வந்து தீயை அனைத்தனர்.

இதனால் அப்பகுதியில் சென்றுக்கொண்டிருந்த மக்களிடையே பெரும் பரபரப்பும் அச்சமும் தொற்றியது.

banner

Related Stories

Related Stories