Tamilnadu

“அனைவரும் சமமாக இருக்க வேண்டும்.. அங்கே புத்தர்; இங்கு பெரியார்” : அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேச்சு!

சென்னை வேளச்சேரியில் உள்ள குருநானக் கல்லூரியில் அரசமரம் பதிப்பகத்தின் முதல் நூலான எழுத்தாளர் யாக்கன் எழுதிய உயர்வுறு கௌதம புத்தர் வாழ்க்கை வரலாறு வெளியிட்டு விழா நடைபெற்றது.

இதில் சிறுபான்மை நலன், மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி.மஸ்தான், வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி ஆகியோர் நூலை வெளியிட, சிறுபான்மை நல ஆணையர் தலைவர் பீட்டர் அல்போன்ஸ், அரசமரம் பதிப்பகத்தின் பதிப்பாளர் சாக்கிய சக்தி ஆகியோர் பெற்றுக் கொண்டார். இந்நிகழ்வில் சென்னையில் உள்ள தாய்லாந்து நாட்டின் தூதகர தூதர் நிடிரோகே போனேபிரசேர்ட் (Nitirooge Phoneprasert), சட்டமன்ற உறுப்பினர் எழிலன், உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

பின்னர் சிறுபான்மை நல ஆணையர் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் நிகழ்ச்சியில் பேசுகையில், “கௌதம புத்தரின் நீண்ட நெடிய வாழ்க்கை என்பது மிகுந்த போராட்டத்திற்கு கூரியது. மனிதனை மனிதன் சுமப்பது இழிவு என்று நாம் சொன்னார். ஆனால், அது தான் நாம் காலச்சரம், நாம் பண்பாடு என கூறிக்கொண்டு ஒரு கூட்டம் திரிகிறது.” எனத் தெரிவித்துள்ளார்.

பின்னர் பேசிய அமைச்சர் செஞ்சி. மஸ்தான், “பௌத்த மதத்தில் கூறியதை தான், பெரியார் கூறியுள்ளார், அங்கே புத்தர், என்றால் இங்கு பெரியார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புத்தராக, இயேசுவாக, காந்தியாக திகழ்ந்து கொண்டு இருக்கிறார். அனைவரும் சமமாக இருக்க வேண்டும் என்று சொல்கிறது பௌத்த மதம்; அதே போல் தான் திராவிட மாடல் ஆட்சி நடைபெறுகிறது.” எனத் தெரிவித்துள்ளார்.

அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறியதாவது, “இலங்கை நாட்டில் நடைபெறும் இந்த நெருக்கடியான சூழலில் தமிழ்நாடு வந்த இலங்கை தமிழர்களுக்கு அரசு சார்பில் உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இலங்கைத் தமிழர்களை இந்தியா கொண்டு வருவது குறித்து ஒன்றிய அரசு தான் முடிவெடுக்க வேண்டும். நம்மை நாடி வரும் மக்களை காக்க வேண்டியது நமது கடமை. வாக்ப் வாரிய தேர்வு நடத்துவது குறித்து, முதலமைச்சருடன் ஆலோசிக்கப்பட்டு விரைவில் அறிவிப்பு வெளியாகும்” என தெரிவித்தார்.

Also Read: ’இது என்னனு கண்டுபிடிக்க சில நேரம் ஆகலாம்..’ : மில்லியன்களில் வியூஸ் பெற்ற வைரல் வீடியோவின் பின்னணி இதோ!