வைரல்

’இது என்னனு கண்டுபிடிக்க சில நேரம் ஆகலாம்..’ : மில்லியன்களில் வியூஸ் பெற்ற வைரல் வீடியோவின் பின்னணி இதோ!

மீண்டும் புவியில் டைனோசர்கள் உலா வருகின்றனவா எனும் சந்தேகத்தை எழுப்பும் வகையில் சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

’இது என்னனு கண்டுபிடிக்க சில நேரம் ஆகலாம்..’ : மில்லியன்களில் வியூஸ் பெற்ற வைரல் வீடியோவின் பின்னணி இதோ!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஹாலிவுட்டில் வெளியான ஜுராசிக் பார்க் வரிசை படங்களின் மூலமே டைனோசர் என்ற உயிரினம் குறித்த தகவல்கள் பெரும்பாலான மக்களுக்கு தெரிய வந்திருக்கும்.

இருப்பினும், ஆபத்தான விலங்கினமாக இருந்த டைனோசர்கள் உலகில் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் இருந்ததாகவும் கண்டறியப்பட்டிருக்கிறது.

இதுபோக, பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூவுலகின் மீது மிகப்பெரிய விண்கல் மோதியதன் காரணமாக டைனோசர்கள் அழிந்துவிட்டதாகவும் கருத்துகள் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இப்படி இருக்கையில், மீண்டும் புவியில் டைனோசர்கள் உலா வருகின்றனவா எனும் சந்தேகத்தை எழுப்பும் வகையில் சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

அதன்படி, கடற்கரை இங்கும் அங்குமாக டைனோசர் குட்டிகளை போன்ற உயிரினம் ஒன்று ஓடி விளையாடிக் கொண்டிருக்கும் காட்சி அதில் இடம்பெற்றிருக்கும்.

உண்மையில் அது கோட்டிஸ் என்ற விலங்காகும். தென் அமெரிக்கா, மத்திய அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் தென்மேற்கு அமெரிக்காவைச் சேர்ந்த பகுதிகளில் இந்த உயிரினம் வாழ்ந்து வருகிறது.

இந்த உயிரினம் உலா வருவதை வீடியோ எடுத்து அதனை ரிவர்ஸ் மோடில் பதிவிட்டிருப்பதால் உண்மையிலேயே பார்ப்பதற்கு டைனோசர் குட்டிகளை போன்றே காட்சி அளிக்கிறது. இந்த வீடியோ தற்போது வரை 14 மில்லியனுக்கும் அதிகமானோரால் பார்க்கப்பட்டிருக்கிறது.

banner

Related Stories

Related Stories