Tamilnadu
ஓராண்டு நிறைவு.. ஈராண்டு தொடக்கம்: பேரவையில் புதிதாக 5 அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்!
தி.மு.க அரசு ஓராண்டு நிறைவு பெறுவதையொட்டி சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது இந்த ஓராண்டில் நூற்றாண்டு போற்றும் வரலாற்று சாதனைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பட்டியலிட்டார்.
இரண்டாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் திராவிட மாடல் ஆட்சியின் 5 புதிய அறிவிப்புகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சட்டப்பேரவை உரையின்போது அறிவித்துள்ளார்.
அதன் விவரம் வருமாறு:-
1. அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இனி காலை சிற்றுண்டி வழங்கப்படும். முதற்கட்டமாக 1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம், அனைத்து மாணவர்களுக்கும் படிப்படியாக விரிவுப்படுத்தப்படும்.
2. 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு சிறப்பு ஊட்டச்சத்து திட்டம் செயல்படுத்தப்படும்.
3. 25 மாநகராட்சிகளில் 108 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தகைசால் பள்ளிகள் உருவாக்கப்படும்.
4. ரூ.1000 கோடி ஒதுக்கீட்டில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம் 234 தொகுதிகளிலும் நடைமுறைப்படுத்தப்படும்.
5. கிராமங்களில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் இருப்பது போல நகரங்களில் மருத்துவ நிலையங்கள் அமைக்கப்படும். 25 மாநகராட்சிகளில் நகர்ப்புற மருத்துவ நிலையங்கள்.708 நகர்ப்புற மருத்துவ நிலையங்கள் அமைக்கப்படும்.
என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
Also Read
-
காலை உணவுத் திட்டம் : “குழந்தைகளின் வயிறும் நிறைகிறது, அறிவும் வளர்கிறது!” - முதலமைச்சர் நெகிழ்ச்சி!
-
ஆக.26-ல் காலை உணவுத் திட்ட விரிவாக்கம் : சிறப்பு விருந்தினாராக கலந்துகொள்ளும் பஞ்சாப் முதல்வர்!
-
கேழ்வரகு உற்பத்தித் திறனில் இந்தியாவிலேயே முதலிடம்.. விவசாயிகள் போராட வேண்டிய நிலை இல்லாத தமிழ்நாடு!
-
நவம்பரில் கேரளா வரும் மெஸ்ஸியின் அர்ஜென்டினா கால்பந்து அணி : உறுதி செய்த கால்பந்து வாரியம் !
-
”மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி - ஒருமைப்பாட்டை வலிமைப்படுத்தும்” : முதலமைச்சர் பேச்சு!