Tamilnadu
வீட்டின் கூரை இடிந்து விழுந்து கர்ப்பிணி பெண் உட்பட 2 பேர் பரிதாப பலி.. சோகத்தில் மூழ்கிய கிராம மக்கள்!
தூத்துக்குடி அண்ணாநகர் 3 வது தெருவில் வசித்து வருபவர் முத்துராமன் மனைவி காளியம்மாள், இவரது மகள் காத்தம்மாள் என்ற கார்த்திகா திருமணம் முடிந்து பத்து மாதம் ஆகிறது. கர்ப்பிணியான இவரை கடந்த வாரம் வளைகாப்பு நடத்தி அழைத்து வந்து உள்ளனர்.
இவர்கள் வழக்கம் போல் வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர். அதிகாலை 4 மணியளவில் வீடு திடீரென இடிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளில் சிக்கிய கர்ப்பிணி மகள் மற்றும் தாய் உயிரிழந்தனர். வீட்டின் ஒரு ஓரத்தில் படுத்திருந்ததால் முத்துராமன் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்.
இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர் இடிபாடுகளில் சிக்கிய இரு உடல்களையும் மீட்டு உடற்கூறு பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Also Read
-
6 நாட்களில் 1,500 டன் கழிவுகள்... தமிழ்நாடு முழுவதும் SIPCOT தொழிற்பூங்காக்களிலில் மாபெரும் தூய்மைப் பணி!
-
கோலகலமாக நடைபெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு... முதல் 3 பரிசுகளை வென்றது யார்? என்ன? - விவரம் உள்ளே!
-
5-வது இடத்தில் இறங்கி ஆடிய KL ராகுல்… கொண்டாடிய ரசிகர்கள்... காரணம் என்ன?
-
‘டால்பின்’ அன்புமணி.. வெளியேற தயாரா?.. - அன்புமணியை அறிக்கை மூலம் விளாசிய அமைச்சர் MRK பன்னீர்செல்வம்!
-
வடகிழக்குப் பருவமழை, புயல்... விவசாயிகளுக்கு ரூ.111.96 கோடி நிவாரணத்தொகை.. அரசாணை வெளியீடு!