Tamilnadu
மீண்டும் பெண் குழந்தை.. 5 மாத மகளை 1.40 லட்சத்துக்கு விற்ற தாய்.. நெல்லை→கேரளா→நெல்லை: மீட்டது எப்படி?
நெல்லை மாவட்டம் உவரி அண்ணாநகரைச் சேர்ந்தவர் விஜயன். இவருடைய மனைவி தங்க செல்வி. இந்த தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். விஜயன் 13 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இந்த நிலையில் தங்கசெல்வி உவரி அண்ணா நகரைச் சேர்ந்த அர்ஜுனன் என்பவரை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 2-வது திருமணம் செய்துள்ளார்.
அவர் மூலம் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு தங்க செல்விக்கு மீண்டும் ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது . அந்த குழந்தையை தங்கள் வீட்டிற்கு எடுத்து வந்த பிறகு கூட்டப்பனை சுனாமி நகரைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் மாரியப்பன் அவரிடமிருந்து பச்சிளம் குழந்தையை ஒரு லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளார்.
பின்னர் மாரியப்பன் குழந்தையை கேரள மாநிலம் கோட்டயம் ஆம்பூரை சேர்ந்த செல்வகுமார்- சந்தனவின்சியா என்ற தம்பதியிடம் விற்றுள்ளார். அந்த தம்பதியினர் குழந்தையை கோட்டயம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அந்த குழந்தை விலைக்கு வாங்கப்பட்டது, குழந்தையின் பெற்றோர் விவரம் தெரியவந்தது.
இதனை அடுத்து கேரள குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் மற்றும் குழந்தைகள் நலக்குழு தலைவர் நெல்லையில் உள்ள சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலருக்கு தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து உவரி போலிஸில் புகாரளிக்கப்பட்டதன் பேரில் வழக்கு பதிவு செய்து கேரளாவிற்கு விற்பனை செய்யப்பட்ட குழந்தை மீட்கப்பட்டது.
இது தொடர்பாக குழந்தையின் தாய் தங்கசெல்வி குழந்தையை வாங்கிய கேரள தம்பி செல்வக்குமார் சந்தனவின்சாயா மற்றும் குழந்தையை விற்பனை செய்த மாரியப்பன் ஆகிய 4 பேரை கைது செய்தனர். குழந்தையின் தந்தை அர்ஜுனனை தேடி வருகின்றனர்.
Also Read
-
காலை உணவுத் திட்டம் : “குழந்தைகளின் வயிறும் நிறைகிறது, அறிவும் வளர்கிறது!” - முதலமைச்சர் நெகிழ்ச்சி!
-
ஆக.26-ல் காலை உணவுத் திட்ட விரிவாக்கம் : சிறப்பு விருந்தினாராக கலந்துகொள்ளும் பஞ்சாப் முதல்வர்!
-
கேழ்வரகு உற்பத்தித் திறனில் இந்தியாவிலேயே முதலிடம்.. விவசாயிகள் போராட வேண்டிய நிலை இல்லாத தமிழ்நாடு!
-
நவம்பரில் கேரளா வரும் மெஸ்ஸியின் அர்ஜென்டினா கால்பந்து அணி : உறுதி செய்த கால்பந்து வாரியம் !
-
”மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி - ஒருமைப்பாட்டை வலிமைப்படுத்தும்” : முதலமைச்சர் பேச்சு!