Tamilnadu

“முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு ஆன்மிக அரசு..” : தி.மு.க அரசை பாராட்டி புகழாரம் சூட்டிய ஆதீனங்கள் !

சென்னை, தலைமைச் செயலகத்தில் நேற்று (27.4.2022) தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் உள்ள ஆதினங்கள் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து ஆலோசனை நடத்தினார்கள். அக்கூட்டத்தில் கடந்த கலைஞர் ஆட்சியில் சைவ, வைணவம் இணைந்து ஆன்மிக பேரவை ஒன்றை உருவாக்கி மூன்று மாதத்திற்கு ஒருமுறை எங்களிடம் குறைகளை கேட்டு நிவர்த்தி செய்து வந்தார். அதன்பிறகு நீண்ட ஆண்டுகள் இந்த பேரவையின் செயல்பாடுகள் இல்லாமல் இருந்தது. தங்களது சிறந்த ஆட்சியில் மீண்டும் ஆன்மீக பேரவை உருவாக்க வேண்டும். இந்து அறநிலையத்துறையின் செயல்பாடுகள் சிறப்பாக உள்ளன.

முன்னதாக தஞ்சாவூர் மாவட்டத்தை அடுத்த களிமேடு கிராமத்தில் உயிரிழந்தவர்களுக்காக இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்து அறநிலையத் துறை மானிய கோரிக்கை வரும் மே 5ம் தேதி விவாதம் நடைபெறவுள்ளது. இத்துறையின் திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தருமபுர ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞான சம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் , “ஆதீன கர்த்தர்கள், சங்கரா சார்யர், ஜீயர்களை உள்ளடக்கிய தெய்வீகப் பேரவை மீண்டும் நடத்த வேண்டும் எனவும், ஆதீனங்களுக்கான சட்ட திட்டங்கள், பழக்க வழக்கங்களின் படி அரசு செயல்பட வேண்டும் எனவும், திருக்குவளையில் கண்டறியப்பட்ட மரகத லிங்கத்தை திருக்கோயிலுக்கு ஒப்படைக்க வேண்டும் எனவும் இந்த அரசு ஆன்மிக அரசு எனவும் தெரிவித்தார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன், தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், ஸ்ரீ லஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞான சம்பந்த பரமாச் சாரியார் சுவாமிகள், ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பராமர்ச் நாடு என்கிற இந்தப் பரந்து விரிந்த பூங்காவில் ஆங்காங்கு கரையான் புற்றுக்களாக சமுதாயச் சீர்கேடுகள் உருவாகி இருக்கின்றன.

ஒவ்வொரு புற்றுக்குள்ளும் ஒளிந்து கிடக்கும் வகுப்புவாத நச்சரவங்கள் ஒடுக்கப்பட்ட மக்களின் உயிரைக் குடித்துக்கொண்டே இருக்கின்றன. எனவேதான் புற்றுக்கள் ஒழிந்த பூங்காவாக நாடு திகழ வேண்டுமென நாம் பணியாற்றுகிறோம்.

சாரியார் சுவாமிகள், தவத்திரு சாந்தலிங்க மருதாச்சல அடிகளார், தவத்திரு குமரகுருபர சுவாமிகள், ஆதீனகர்த்தர் ஸ்ரீலஸ்ரீ சிவஞான பாலய குருமகா சன்னதி னானம், ஸ்ரீலஸ்ரீ சத்தியஞான தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள், ஸ்ரீலஸ்ரீ மகா லிங்க பண்டார சன்னதி 28 ஆவது குருமகாசன்னிதானம், அழகிய மணவாள சம்பத்குமார் ராமானுஜ ஜீயர், திருக்கைலாய பரம்பரை செங்கோல் ஆதீனம் 103 வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சிவப் பிரகாச தேசிய சத்திய ஞான பரமாச்சாரிய சுவாமிகள், ஸ்ரீலஸ்ரீ நிரம்ப அழகிய தேசிகர்கிய ஞானபிரகாச தேசிக சுவாமிகள், 29 வது குரு மகா சன்னதிதானம், காமாட்சி தாஸ் சுவாமிகள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Also Read: “முத்தமிழின் அரசர் கலைஞருக்கு வரலாற்றுக் கடமையைச் செய்ய நினைக்கும் தமிழ்நாடு அரசு” : ‘முரசொலி’ பாராட்டு!