Tamilnadu
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு: பங்களா ஊழியர்கள் 25 பேருக்கு சம்மன் - அதிரடி விசாரணையில் இறங்கிய போலிஸ்!
கொடநாடு பகுதியில் ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்கு சொந்தமான தேயிலை எஸ்டேட் மற்றும் பங்களா உள்ளது. கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23ம் தேதி நள்ளிரவு 11 பேர் கொண்ட கொள்ளை கும்பல் இந்த எஸ்டேட்டிற்குள் நுழைந்தது. உள்ளே சென்ற அந்த கும்பல் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலாளி ஓம்பகதூரை கொலை செய்தது.
பின்னர், பங்களாவிற்குள் சென்று ஜெயலலிதா மற்றும் சசிகலா தங்கும் அறைகளில் இருந்து பல்வேறு பொருட்களை கொள்ளையடித்து சென்றது. இது தொடர்பாக சோலூர் மட்டம் ேபாலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில், கொள்ளை கும்பலுக்கு தலைமை வகித்த சேலம் ஆத்தூர் பகுதியை சேர்ந்த கனகராஜ் சாலை விபத்தில் உயிரிழந்தார். மேலும், இந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட சயான், வாளையார் மனோஜ் உட்பட கேரளாவை சேர்ந்த 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
மூன்று ஆண்டுகளாக இவ்வழக்கு உதகையில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில் இவ்வழக்கு மீண்டும் முதலில் இருந்து துவங்கி விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குற்றவாளிகள் சயான், ஜம்சீர் அலி, ஜித்தின் ஜாய், தீபு உட்பட 8 பேரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், சாலை விபத்தில் உயிரிழந்த கனகராஜின் சகோதரர் தனபால், கனராஜின் மனைவி, மைத்துனர், கொடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன் உட்பட இதுவரை 220 க்கும் மேற்பட்ட சாட்சிகளிடம் தனிப்படை போலிஸார் மீண்டும் விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் அ.தி.மு.கவின் முக்கிய அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலாவிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
அந்த விசாரணையின் போது, சசிகலாவின் வாக்குமூலத்தின் அடிப்படையில் எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய நண்பரும் அ.தி.மு.க மாநில வர்த்தகர் அணி அமைப்பாளருமான சஜீவனிடம் நேற்று கோவையில் வைத்து தனிப்படை போலிஸார் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கொலை மற்றும் கொள்ளை சம்பவம் நடைபெற்ற ஏப்ரல் 23ஆம் கொடநாடு தேயிலை தோட்டம் மற்றும் கொள்ளை சம்பவம் நடைபெற்ற பங்களாவில் பணிபுரிந்த காவலாளிகள், சமையல்காரர்கள், அலுவலக ஊழியர்கள் வாகன ஓட்டிகள் என 25க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு தனிப்படை போலிஸார் சம்மன் அனுப்பியுள்ளனர். அந்த சம்மனில் இன்று முதல் மூன்று நாட்களுக்குள் கோவையில் உள்ள தனிப்படை போலிஸார் அலுவலகத்தில் ஆஜராகுமாரு உத்தரவிட்டுள்ளனர்.
Also Read
-
“ஒன்னு மின்வெட்டு, இரண்டு அரிவாள் வெட்டு.. இதான் தவெக ஆட்சி” : முப்பெரும் விழாவில் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
“வேங்கைவயல் விவகாரத்தில் நீலிக்கண்ணீர்... மன்னிப்புக் கேட்க தயாரா?” : வன்னி அரசுக்கு கோவி.செழியன் கேள்வி!
-
“24 மணி நேரத்தில் 8 கொலைகள்.. தினமும் எகிறும் Crime Rate” : தவெக அரசுக்கு கனிமொழி எம்.பி கடும் கண்டனம்!
-
எழுச்சியுடன் நடந்த திமுக முப்பெரும் விழா.. விருதுகளை வழங்கி சிறப்பித்த கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
Dummy முதலமைச்சரின் ஆட்சியில் காற்றில் பறக்கும் சட்டம் - ஒழுங்கு : எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி சாடல்!