Tamilnadu
INSTA மூலம் வலை.. கேரள சிறுமிகளின் ஆபாச படங்களை வைத்து மிரட்டல்.. சென்னை கல்லூரி மாணவன் சிக்கியது எப்படி?
கேரளா மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு சிறுமிகளிடம், சென்னையைச் சேர்ந்த மார்க் டி குரூஸ் (19) என்ற இளைஞன் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி சிறுமிகளிடமிருந்து ஆபாச புகைப்படங்களை பெற்றுள்ளார்.
மார்க் டி குரூஸ் கடந்த சில நாட்களாக கேரள சிறுமிகளின் ஆபாச புகைப்படங்களை சமூக வலை தளத்தில் வெளியிடுவதாகவும், அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு அனுப்பி விடுவதாகவும் கூறி மிரட்டியுள்ளார்.
இது குறித்து சிறுமியின் பெற்றோர் கேரளா மாநில சைபர் குற்றப்பிரிவில் புகார் கொடுத்துள்ளனர். கேரளா மாநில சைபர் குற்றப்பிரிவு போலிஸார் புகார் மனுவை தமிழக போலிஸாருக்கு அனுப்பி வைத்து நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொண்டதன் பேரில் சென்னை பெருநகர காவல் புனித தோமையர் மலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்யப்பட்டது.
புனித தோமையர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்து வழக்கில் சம்பந்தப்பட்ட செயின்ட் தாமஸ் மவுன்ட் பகுதியைச் சேர்ந்த மார்க் டி குரூஸ் என்ற இளைஞனை கைது செய்தனர். அவரிடமிருந்து 1 செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட மார்க் டி குரூஸ் தனியார் கல்லூரியில் பி.பி.ஏ இரண்டாம் ஆண்டு படித்து வருவது தெரியவந்தது.
கைது செய்யப்பட்ட மார்க் டி குரூஸ் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.
Also Read
-
மார்ச் மாதத்தில் கேரளா வருகிறது மெஸ்ஸியின் அர்ஜென்டினா அணி... உறுதி செய்து வந்த E-Mail !
-
பழனிசாமிக்கே தேர்தல் ஆணையத்தின் SIR நடவடிக்கை மீது சந்தேகம் இருக்கிறது - அம்பலப்படுத்திய முரசொலி !
-
பேருந்து கட்டணம் இல்லை : மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு புதிய அறிவிப்பு வெளியிட்ட துணை முதலமைச்சர்!
-
“சென்னையில் 50 ஆண்டுகளாக இருந்த பட்டா பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது!”: துணை முதலமைச்சர் உதயநிதி!
-
”பா.ஜ.கவிற்கு வாக்களிக்காவிட்டால் வெளியே நடமாட முடியாது : பீகார் மக்களை மிரட்டிய ஒன்றிய அமைச்சர்!