Tamilnadu
இந்த 10 கோவில்களில் பக்தர்களுக்கு இனி இலவச பிரசாதம்... என்னென்ன உணவு வகைகள் கிடைக்கும்?
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தமிழகத்தில் உள்ள அனைத்து முக்கிய கோவில்களிலும் இலவச பிரசாதம் வழங்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் உள்ள 10 கோவில்களில் இலவச பிரசாதம் வழங்கும் திட்டம் இன்று முதல் தொடங்கியுள்ளது. இந்த திட்டத்தை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சென்னை வடபழனி முருகன் கோவிலில் தொடங்கிவைத்தார்.
வடபழனி முருகன் கோவில், திருச்செந்தூர் முருகன் கோவில், பழனி முருகன் கோவில், திருவேற்காடு கருமாரியம்மன் கோவில், சமயபுரம் மாரியம்மன் கோவில், மருதமலை முருகன் கோவில், திருத்தணி முருகன் கோவில், பண்ணாரி மாரியம்மன் கோவில், திருவரங்கம் அரங்கநாதர் கோவில், மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் ஆகிய 10 கோவில்களில் இந்த திட்டம் இன்று முதால் தொடங்கியது.
இந்த பத்து கோவில்களில் இலவச பிரசாதமாக தலா 40 கிராம் எடையில் பொங்கல், தயிர் சாதம், லட்டு, புளியோதரை, சுண்டல் உள்ளிட்ட 4 முதல் 6 வகையான உணவுகள் இலவசமாக வழங்கப்பட உள்ளது. மேலும் அடுத்தடுத்து மற்ற கோவில்களிலும் இந்தத் திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது.
Also Read
-
”தலைநகரில் பேரறிஞர் அண்ணா சிலையின் மீது இழுக்கு… கொள்கையில்லா த.வெ.க கோமாளிகளின் அட்டூழியம்”
-
“காங்கிரஸின் குணம் வெளியானது... தோல்வியும் துரோகமும் எங்களுக்கு புதிது அல்ல”: டி.ஆர்.பாலு MP விளாசல்!
-
பி.எம் ஸ்ரீ திட்டத்தில் தமிழ்நாடு இணையுமா? – ஒன்றிய அரசின் விவகாரம் – விஜய் எடுக்கும் முடிவு என்ன?
-
பெண்கள் பாதுகாப்பின் லட்சணம்... வாக்குப்பதிவு நாளில் சிறுமிக்கு பாலியல் தொல்லை.. TVK நிர்வாகி கைது!
-
“த.வெ.க.வினால் தலைகுனியும் தமிழ்நாடு” : தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு!