Tamilnadu
பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு சென்ற புது மாப்பிள்ளை வெட்டி கொலை.. திருமணமான 15 நாளில் நடந்த கொடூரம்!
திண்டுக்கல் மாவட்டம், அனுமந்த நகர் பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகரன். இளைஞரான இவருக்கு கடந்த 15 நாட்களுக்கு முன்புதான் தென்றல் என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது.
இந்நிலையில், சூர்யா என்ற நண்பரின் பிறந்நாள் கொண்டாட்டத்தில் பங்கேற்க பிரபாகரன் சென்றுள்ளார். அங்கு திடீரென வந்த மர்ம கும்பல் ஒன்று அவர் சரமாரியாக கத்தியால் தாக்கியுள்ளது. தடுக்க வந்த அவரது நண்பர் கார்த்திக் என்பவரையும் அந்த கும்பல் கத்தியால் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
பிறகு ரத்த வெள்ளத்தில் இருந்த பிரபாகரனை மீட்டு அவரது நண்பர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்கு பதிவு செய்து முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடைபெற்றுள்ளதா? என விசாரணை செய்து வருகின்றனர்.
திருமணம் முடிந்து 15 நாட்கள் மட்டுமேயான நிலையில் புது மாப்பிள்ளை வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் திண்டுக்கல்லில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
”தலைநகரில் பேரறிஞர் அண்ணா சிலையின் மீது இழுக்கு… கொள்கையில்லா த.வெ.க கோமாளிகளின் அட்டூழியம்”
-
“காங்கிரஸின் குணம் வெளியானது... தோல்வியும் துரோகமும் எங்களுக்கு புதிது அல்ல”: டி.ஆர்.பாலு MP விளாசல்!
-
பி.எம் ஸ்ரீ திட்டத்தில் தமிழ்நாடு இணையுமா? – ஒன்றிய அரசின் விவகாரம் – விஜய் எடுக்கும் முடிவு என்ன?
-
பெண்கள் பாதுகாப்பின் லட்சணம்... வாக்குப்பதிவு நாளில் சிறுமிக்கு பாலியல் தொல்லை.. TVK நிர்வாகி கைது!
-
“த.வெ.க.வினால் தலைகுனியும் தமிழ்நாடு” : தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு!