Tamilnadu
நேற்று அறிவிப்பு.. இன்று சமத்துவநாள் கொண்டாட்டம்: அம்பேத்கர் படத்துக்கு முதல்வர் மலர்தூவி மரியாதை!
இந்தியா முழுவதும் அண்ணல் அம்பேத்கரின் 132-வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் அம்பேத்கரின் திருவுருவப்படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் அம்பேத்கர் மணி மண்டபத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்றார். அங்கு வைக்கப்பட்டிருந்த அம்பேத்கர் திருவுருவப்படத்திற்க மலர்தூவிரி மரியாதை செலுத்தினார். பிறகு," சாதி வேறுபாடுகள் ஏதுமில்லாத சமத்துவ சமுதாயத்தை அமைக்க நாம் அனைவரும் பாடுபடுவோம்" என சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
பிறகு, இந்நிகழ்வில் கலந்து கொண்ட வி.சி.க தலைவர் தொல் திருமாவளவன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அம்பேத்கர் சிலையை பரிசாக வழங்கினார்.
நேற்று நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில் அம்பேத்கர் பிறந்தநாள் இனி சமத்துவ நாளாக கொண்டாடப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு சமத்துவ நாள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
Also Read
-
“பெண்கள் உயர்ந்து நடைபோட உரிமைத் தொகையும் உயரும்; உரிமையும் உயரும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை : “வெல்லும் தமிழ்ப் பெண்கள்” மாபெரும் வெற்றிக் கொண்டாட்டம்
-
ஒன்றிய அமைச்சர்கள் இல்லாத நாடாளுமன்ற மாநிலங்களவை கூட்டம்! : எதிர்ப்புக்கு பணிந்த ஒன்றிய அரசு!
-
திருப்பரங்குன்றம் - அதிகாரக் குரலில் நீதிமன்றங்களுக்கு உத்தரவிடும் மோகன் பகவத் : மு.வீரபாண்டியன் கண்டனம்!
-
“2026 வெற்றிக்கு அடித்தளமாக ‘இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு’ அமையும்!” : துணை முதலமைச்சர் உதயநிதி அழைப்பு!