Tamilnadu
மூட நம்பிக்கை.. உயிர் துறக்க 40 நாட்கள் உணவருந்தாமல் இருந்த மூதாட்டி, இளம் பெண் மீட்பு!
திருச்சி மாவட்டம், மணப்பாறை பகுதியைச் சேர்ந்தவர் ஆரோக்கியம்மாள். திருமணமாகாத இவர் உயிரிழந்த தனது சகோதரரின் மகள் சவரியம்மாளை வளர்த்து வருகிறார். இவர் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் கடந்த ஒருமாதமாக இவர்கள் இருவரும் வீட்டில் இருந்து வெளியே வரவில்லை. மேலும் அவர்கள் வீட்டை சுற்றி தூர்நாற்றம் அடித்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த அப்பகுதி மக்கள் இது குறித்து போலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
பிறகு அங்கு வந்த போலிஸார், வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, இரண்டு பேரும் உடல் மெலிந்து படுத்த படுக்கையாக இருந்துள்ளனர். மேலும் வீட்டில் எந்த பொருட்களும் இல்லை. அதேபோல் இரண்டு தேங்காய் மட்டுமே இருந்துள்ளது.
இதையடுத்து போலிஸார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது இருவரும் தங்களுக்கு செய்வினை செய்யப்பட்டுள்ளதால் புனித வெள்ளியில் உயிர்துறக்க முடிவு செய்து 40 நாட்கள் உணவு உட்கொள்ளாமல் இருந்து வருவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
பின்னர் போலிஸார் இருவரையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு இரண்டு பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
வெளியான அதிர்ச்சி காணொளி.. தவெக அரசின் அலட்சியம்.. நோயாளிகளே குளுக்கோஸ் பாட்டிலை பிடித்து சிகிச்சை!
-
தொடரும் கொலைகள் : “குற்றவாளிகள் எல்லாம் தஞ்சமாகும் குப்பைத் தொட்டி...” - த.வெ.க.வை விமர்சித்த உதயநிதி !
-
“பிற்படுத்தப்பட்ட மக்களின் சமூகநீதி உரிமையை உறுதிசெய்ய வேண்டும்!” : மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!
-
சென்னையில் நள்ளிரவில் பயங்கரம்.. தவெக நிர்வாகி ஓட ஓட வெட்டி கொடூர கொலை.. பின்னணி என்ன?
-
Part Time Job : விளம்பர பதாகை வைத்த நந்தனம் கல்லூரி மாணவருக்கு நேரந்த சோகம்!