Tamilnadu
ரயில் பயணத்தின் போது தகராறு.. ஒருவர் சுட்டுக்கொலை - CRPF வீரருக்கு 7 ஆண்டுகள் சிறை - நடந்தது என்ன?
திருவள்ளூர் அருகே கடந்த 1996 ஆம் ஆண்டில் சென்னையில் இருந்து கோயம்புத்தூர் காவலர் பயிற்சிகாக செல்ல சேரன் விரைவு ரயிலில் சாதாரண வகுப்பில் 5 சி.ஆர்.பி.எப் காவலர்கள் ஏறியுள்ளனர். அப்போது கூட்டம் நெரிசல் அதிகமாக இருந்ததால் இருக்கையில் அமர காவலர்களுக்கும் பயணிகளுக்கும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
அப்போது மேற்கு வங்க மாநிலத்தை சார்ந்த ஏசி தாஸ் என்ற சி.ஆர்.பி.எப் காவலர் பயிற்சிக்காக வழங்கப்பட்டிருந்த துப்பாக்கியை எடுத்து நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த ராஜா என்பவரை சுட்டதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார்.
இது குறித்து வழக்கு பதிந்த அரக்கோணம் இரயில்வே காவல்துறையினர் சம்பவம் நடந்த இடம் கடம்பத்தூர் எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்ததால் வழக்கினை கடம்பத்தூர் காவல்துறையினருக்கு மாற்றி கொடுத்தனர்.
இந்த வழக்கு திருவள்ளூர் முதலாம் அமர்வு நீதிமன்றத்தில் நடை பெற்று வந்த நிலையில் இறுதி கட்ட விசாரணயில் துப்பாக்கியால் சுட்டது நிரூபிக்கப்பட்டதால், சி.ஆர்.பி.எப் காவலர் ஏசி தாஸ் என்பவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும்,10 ஆயிரம் ரூபாய் அபராதமும், அபராதம் கட்ட தவறினால் கூடுதலாக 6 மாத தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்பளித்தார்.
Also Read
-
"ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் களத்தில் கண்துஞ்சாமல் செயல்பட்டு, மக்களைக் காப்போம்" - முதலமைச்சர் உறுதி !
-
அடுத்த இரண்டு நாட்களுக்கு வெளுக்கப்போகும் மழை... எந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்? - விவரம் உள்ளே!
-
பருவமழை குறித்து திமுக சார்பில் நாளை ஆலோசனைக் கூட்டம்... தலைமைக் கழகம் அறிவிப்பு !
-
காவலர் வீரவணக்க நாள் விழா : 175 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர்!
-
தொடங்கிய வடகிழக்கு பருவமழை... தென்சென்னை பகுதியில் துணை முதலமைச்சர் ஆய்வு!