Tamilnadu

தி.மு.க அரசை பாராட்டிய கேரள பாம்பு பிடி மன்னன் வாவா சுரேஷ்.. என்ன கூறினார் தெரியுமா?

கேரளாவின் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த வாவா சுரேஷ் என்பவர் பாம்பு பிடிப்பதில் வல்லவர். அதிலும் குறிப்பாக ராஜ நாகம் பிடிப்பதில் கைதேர்ந்தவர். இவரை அறியாத கேரள மக்களே இருக்க முடியாது.

இப்படி இருக்கையில், அண்மையில் கோட்டயம் பகுதியில் உள்ள குடியிருப்பில் பாம்பு புகுந்ததால் சுரேஷ் அங்குச் சென்று பாம்பைப் பிடித்து சாக்குப் பையில் போட முயன்றபோது அவரை பாம்பு கடித்தது.

இதனால் சுயநினைவு இழந்த வாவா சுரேஷ் தீவிர மருத்துவ சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் கேரள அரசின் தரமா சிகிச்சை காரணமாக வா முழுமையா குணமடைந்து மீண்டும் பாம்ப பிடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் உள்ள கோவிலுக்கு வாவா சுரேஷ் வந்துள்ளார். அப்போது செய்தியாளர்களிடம் கூறிய வா வா சுரேஷ், "தமிழ்நாட்டில் இருளர் மக்கள் பாம்பு பிடிக்க அனுமதி வழங்கியுள்ளது பாராட்டுதலுக்குரியது. பாம்பு விஷத்திலிருந்து கேன்சர் போன்ற நோய்களுக்கு மருந்துகள் தயாரிக்கப்படுகிறது. தமிழ்நாட்டு அரசை போன்று கேரள அரசும் பாம்பு பிடிக்க அனுமதி வழங்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

Also Read: “பூமியை தாக்கும் சூரிய புயல் - இன்டர்நெட்.. GPS சேவைகள் பாதிக்க வாய்ப்பு” : NASA விஞ்ஞானி சொல்வது என்ன?