Tamilnadu

”நாங்கலாம் சிங்கிள் பசங்க.. இப்படிதான்” - போலிஸ் ஸ்டேஷன் முன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய மாணவர்கள்!

கல்லூரி மாணவர்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் காவல் நிலையத்தின் முன்பு டிக் டாக் செய்வது வீடியோ எடுப்பது, நடனமாடி இன்ஸ்டாகிராமில் பதிவு செய்வது போன்ற பல்வேறு செயல்களில் கெத்து காட்டுவதற்காக ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில், நாகை வெளிப்பாளையம் காவல் நிலையம் முன்பு வந்த கல்லூரி மாணவர்கள் சிலர் கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடி ரகளையில் ஈடுபட்டனர். நாகை பாரதிதாசன் அரசு கல்லூரியில் பயிலும் வேளாங்கண்ணி பகுதியை சேர்ந்த விக்னேஷ் என்ற கல்லூரி மாணவனின் பிறந்தநாளைதான் காவல் நிலையத்தின் வாசலில் கொண்டாடியுள்ளனர் அவரது கல்லூரி நண்பர்கள்.

எந்தவிதமான அச்சமுமின்றி காவல் நிலையத்தின் முன்பு வந்த கல்லூரி மாணவர்கள் இருசக்கர வாகனத்தை நடுவில் நிறுத்தி அதன்மீது வைக்கப்பட்ட கேக்கை வெட்டியது மட்டுமல்லாமல் தலையில் நுரை பொங்க ஸ்பிரே அடித்துக் கொண்டு பிறந்தநாள் கொண்டாடுவதாக ரகளையில் ஈடுபட்டனர்.

கெத்து காட்டுவதற்காக காவல் நிலையத்தின் முன்பு நண்பனின் பிறந்தநாளை கொண்டாடுவதாக கூறிய கல்லூரி மாணவர்கள், காவல் நிலையத்தின் உள்ளே இருந்து காவலர்கள் பார்த்துக் கொண்டிருப்பதை அறிந்து சுதாரித்த பிறகும் எந்தவிதமான பதட்டமும் இல்லாமல் ஆர்வத்தோடு பிறந்த நாளை கொண்டாடி மகிழ்ந்து அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

Also Read: ”அது வெறும் கல்தான்; ஐம்பொன் இல்ல” - 13 லட்சம் கேட்டு ஏமாற்ற முயற்சித்த மாமனார் மருமகன் சிக்கியது எப்படி?

எப்பொழுதும் காவல் நிலையத்தின் வாசலில்தான் கேக் வெட்டுவோம் என்றும், நாங்கள் சிங்கிள் பசங்க அப்படிதான் இருப்போம் என்றும் காவல் நிலையம் முன்பு பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

Also Read: “உங்க கணவரை கடத்திட்டோம்.. 2 லட்சம் கொடுங்க” : போனில் மிரட்டிய மர்ம கும்பல் - பொறிவைத்து பிடித்த போலிஸ்!