Tamilnadu
‘அட்ஜெஸ் பண்ணிக்கோ’ - 16 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் தாய் உட்பட 2 பேர் கைது : ‘பகீர்’ தகவல்!
கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி. இவர் தனது மனைவி மற்றும் 16 வயடு மகளுடன் வசித்து வருகிறார். மேலும் கூலி தொழிலாளியான ராமசாமிக்கு முன் முதுகு தண்டுவட பிரச்சனையால் கடந்த சில வருடங்களுக்கு வீட்டிலேயே முடங்கியுள்ளார்.
இதனால் கும்ப வறுமையை போக்க அவரது மனைவி, சுனிதா புதுக்கடை பகுதியில் உள்ள பர்னிச்சர் கடையில் வேலைக்காக சென்றுள்ளார். அங்கு ராஜையன் என்பவருக்கும் அவரது மனைவிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் தாயிடம் தனிமையில் பழகி வந்த ராஜையன், கடந்த இரண்டுநாள் முன்பு சிறுமியின் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது சிறுமியின் அம்மா இல்லாததால், அவரை அறைக்குள் அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
மேலும் இதுதொடர்பாக தனது தயாரிடம் மகள் சொன்னபோது பெரியதாகக் கண்டுகொள்ளவில்லை என்றும்கடந்த மூன்று மாதங்களாக ஞாயிற்று கிழமை தோறும் வீட்டிற்கு வரும் ராஜையன் தன்னை பாலியல் வன்கொடுமை செய்து வந்ததாகவும் பாதிக்கப்பட்டே பெண்ணே மாவட்ட குழந்தைகள் நல அலுவலரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கூறியுள்ளார்.
இதனையடுத்து சிறுமியை மீட்ட போலிஸார், ஆசாரிப்பள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததனர். மேலும் குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் பியூலா பெல் ஜெனிதா, குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இதுகுறித்து புகாரளித்தனர்.
புகாரின் பேரில் சிறுமியை தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்த ராஜையன் அதற்கு உடந்தையாக இருந்த சிறுமியின் தாய் சுனிதா ஆகியோர் மீது போக்ஸ்சோ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
“பா.ஜ.கவின் நாசகார திட்டங்களை முறியடிக்கும் வலிமை தமிழ்நாட்டுக்கு உள்ளது” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
இசைமுரசு நாகூர் இ.எம்.ஹனீபாவுக்கு நூற்றாண்டு நினைவு மலர்... வெளியிட்டார் துணை முதலமைச்சர் உதயநிதி!
-
கீழடி நம் தாய்மடி! பொருநை, தமிழரின் பெருமை! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
-
அறிவுசார் தலைநகராகத் திகழும் தமிழ்நாடு : திராவிட மாடல் அரசின் தொலைநோக்கு சிந்தனைக்கு எடுத்துக்காட்டு!
-
“தமிழ்நாட்டில் 97 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் ஐயப்பாட்டை எழுப்புகிறது” : வைகோ அறிக்கை!