Tamilnadu
பிரபல யூடியூபரின் Irfan's view சேனல் முடக்கம்? - உணவுப் பிரியர்கள் அதிர்ச்சி - காரணம் என்ன?
யூடியூப் தளத்தில் உணவுப் பிரியர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் இர்ஃபான். உணவு விமர்சகரான இர்ஃபான் பல்வேறு ஹோட்டல்களுக்கு சென்று உணவுகளை வாங்கிச் சாப்பிட்டு, அதன் சுவை குறித்த விமர்சனத்தை வீடியோவாகப் பதிவிடுவார்.
தமிழ்நாட்டில் மட்டுமல்லாது பல்வேறு நாடுகளிலும் உள்ள சிறிய உணவுக்கடைகள் முதல் பெரிய உணவகங்கள் வரை சென்று ஃபுட் ரிவியூ வீடியோக்களை வெளியிட்டு வந்தார் இர்ஃபான்.
சமீபத்தில், உணவு விமர்சகர் இர்பான் சாப்பிட்டு நன்றாக இருப்பதாக ரிவியூ செய்த ஹோட்டல் ஒன்றில் உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு நடத்தியதில் முந்தைய நாள் சமைத்த பிரியாணியை சூடுபடுத்தி வாடிக்கையாளர்களுக்கு பரிமாறி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து இர்ஃபானை கடுமையாக விமர்சித்து பலரும் கமென்ட் செய்தனர். மேலும், தயவுசெய்து இந்த மாதிரி தவறான கடைகளை குறித்து வீடியோக்களை போடாதீர்கள் என்று கடுமையாக விமர்சித்தனர்.
சமீபத்தில் இலங்கை சென்ற இர்ஃபான், அங்குள்ள KFC உணவகத்திற்கு சென்று சாப்பிட்டு, அதுகுறித்து வீடியோ வெளியிட்டார்.
இந்நிலையில், யூடியூப் விதிமுறைகளை மீறியதாக இர்ஃபானின் பக்கம் யூடியூப் நிறுவனத்தால் முடக்கப்பட்டுள்ளது. இந்தச் செய்தி அவரது ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனினும், இர்ஃபானின் யூடியூப் பக்கம் முடக்கப்பட்டதற்கான காரணம் குறித்த தெளிவான தகவல்கள் இதுவரை வெளிவரவில்லை.
இதுதொடர்பாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள இர்ஃபான், “யூடியூப் நமது சேனலை டெர்மினேட் செய்தது ஏன் எனத் தெரியவில்லை. இந்தப் பிரச்சனையை முடிந்தவரை சரிசெய்ய முயல்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!