Tamilnadu
புகைப்பட கலைக்கான ஆஸ்கர் விருது.. WPPh சர்வதேச விருதைப் பெறும் முதல் தமிழர் : யார் இந்த செந்தில் குமரன்?
மதுரை பழங்காநத்தம் பகுதியைச் சேர்ந்த செந்தில் குமரன் (43). இவர் சூழலியல் புகைப்படம் எடுப்பதில் ஆர்வம் கொண்டவர். கடந்த 2001ஆம் ஆண்டு கல்லூரி படிப்பை முடித்த பின்பு பெங்களூரில் உள்ள ஐ.டி கம்பெனியில் கணினி நிபுணராக பணியாற்றி போது, புகைப்படம் மீது கொண்டிருந்த ஆர்வத்தின் காரணமாக தன்னுடைய வேலையை ராஜினாமா செய்துவிட்டு 2001ஆம் ஆண்டு முதல் 20 ஆண்டுகள் சூழலியல் புகைப்படங்கள் எடுத்து வருகிறார்.
இயற்கை மீது ஆர்வம் கொண்ட இவர் ஏற்கனவே இந்தியாவில் மட்டுமல்ல உலக நாடுகள் முழுவதும் பயணித்திருக்கிறார். புலிகள் மனிதனுக்கு இடையிலான மோதல், யானைகளை பழக்கப்படுத்தும் பழங்குடியினர், கலாச்சார திருவிழாக்கள் உள்ளிட்டவைகளை மையமாக வைத்து புகைப்படங்கள் எடுத்து வருகிறார்.
மேலும், இத்துறையில் இதுவரை 20 சர்வதேச விருதுகளைப் பெற்றிருக்கிறார். நேஷனல் ஜியாகரபி அமைப்பின் விருதைப் பெற்றதோடு அதன் அங்கீகரிக்கப்பட்ட உறுப்பினராகவும் உள்ளார். இப்போது 2022 ஆம் ஆண்டிற்கான வேர்ல்ட் பிரஸ் போட்டோ அமைப்பின் சர்வதேச விருதைப் பெற்றுள்ளார்.
பத்திரிகை மற்றும் ஆவணப் புகைப்படத்திற்காக, ஆசியாவில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நால்வரில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. வேர்ல்டு பிரஸ் போட்டோ அமைப்பு வெற்றியாளர்களை வெளியிட்டுள்ளது. உலகிலேயே மிக பெரிய விருது இது. புகைப்பட கலைக்கான ஆஸ்கர் என வர்ணிக்கப்படும் விருது.
இந்த வருடம் சுமார் 4,800 புகைப்பட கலைஞர்கள் 130 நாடுகளிலிருந்து கலந்து கொண்டுள்ளனர். 70 ஆயிரம் படங்கள் போட்டியில் கலந்து கொண்டன. இறுதியில் மொத்தம் 24 புகைப்பட கலைஞர்கள் தேய்வு செய்யப்பட்டுள்ளனர். வரும் மே மாதம் நெதர்லாந்தில் விருது வழங்கும் விழா நடைபெற உள்ளது. தென் இந்தியாவில் இதுவரைக்கும் யாருக்கும் இந்த விருது கிடைத்தது இல்லை என்பது குறிப்பிடதக்கது.
உலகில் மனிதர்கள் தங்களது அத்தியாவசிய தேவைகளை தங்கள் தேவைகளுக்கு அதிகமாக மின்சாரம் உள்ளிட்டவற்றை பயன்படுத்துகின்றனர். அதன் அளவுகளை குறைத்து கொள்ள வேண்டும் இதன் மூலம் காடுகளும் காடுகள் சார்ந்த உயிரினங்களும், விலங்குகளும் பாதுகாக்கப்படும் இயற்கை சூழலும் பாதுகாக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் பல விருதுகளை பெற்றிருந்தாலும் இந்த முறை இந்த விருதை பெற்றமைக்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வாழ்த்தியது எனக்கு பெருமையாகவும் மகிழ்ச்சிகரமாகவும் இருந்ததாகவும் இதற்காக அவருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார்.
Also Read
-
வரலாற்றில் இதுவரையில் இல்லாதது... ஒரே நாளில் அரசுக்கு குவிந்த ரூ.274.41 கோடி வருவாய் : பின்னணி என்ன?
-
தொழில்துறை,கல்வியில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக விளங்கி வருகிறது- இங்கிலாந்துக்கான இந்திய தூதர் பாராட்டு!
-
ஹிந்துஜா குழுமம் ரூ.5000 கோடி முதலீடு: முதலமைச்சரின் வெளிநாட்டு பயணத்தில் 13,016 கோடி முதலீடுகள் ஈர்ப்பு!
-
பணியின்போது கிடைத்த தங்கச் சங்கிலி.. பத்திரமாக ஒப்படைத்த தூய்மை பணியாளருக்கு துணை முதலமைச்சர் பாராட்டு!
-
“வரி சீர்திருத்தத்தை விட முக்கியமாக நிதி சீர்திருத்தமே தேவை” - ஒன்றிய அரசுக்கு முரசொலி அறிவுறுத்தல்!